/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஆர்.எஸ்.எஸ்., அமைப்பிற்கு முதல்வர் வாழ்த்து
/
ஆர்.எஸ்.எஸ்., அமைப்பிற்கு முதல்வர் வாழ்த்து
ADDED : அக் 03, 2025 01:35 AM
புதுச்சேரி: நுாற்றாண்டை நிறைவு செய்துள்ள ஆர்.எஸ்.எஸ்., அமைப்பிற்கு முதல்வர் ரங்கசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவரது வாழ்த்து செய்தி:
இந்திய கலாசாரம் மற்றும் மரபுகளின் அடிப்படையில் ஒற்றுமையான, வலிமையான இந்தியாவை உருவாக்குவது என்கிற நோக்கத்துடன் கடந்த 1925ம் ஆண்டு கேஷவ் பாலிராம் ெஹட்கேவரால் நாக்பூரில் ஒரு கலாசார அமைப்பாக ஆர்.எஸ்.எஸ்., என்கிற ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக சங்கமானது துவங்கப்பட்டது. இச்சங்கம்தனது நுாற்றாண்டை நிறைவு செய்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
தேசம் தான் முதலில் என்ற கொள்கையாலும் ஒரே பாரதம் உன்னத பாரதம் என்கிற நோக்கத்துடன் வழிநடத்தப்பட்டு வரும் இந்த அமைப்பு பல கடினமான காலகட்டங்களை கடந்து, இன்று உலகின் மிகப்பெரிய சமூக அமைப்பாக வளர்ந்து நிற்கிறது.
தேசத்திற்கும், சமூகத்திற்கும் செய்துவரும் அயராத சேவையே இதற்கு காரணம். அதுமட்டுமல்லாது, தேசிய பாதுகாப்பு, சமூக நல்லிணக்கம், ஜனநாயக, கலாசாரத்தை பாதுகாத்தல் ஆகியவற்றிலும் இந்த அமைப்பு மேற்கொண்டு வரும் பணிகள் பாராட்டுக்குரியவை.
சமூக அர்ப்பணிப்பு உள்ள நல்ல இயக்கமாக நுாறாண்டுகளை தொட்ட ஆர்.எஸ்.எஸ்., நமது தேசத்தின் முழுமையான வளர்ச்சிக்கும், சமூக முன்னேற்றத்திற்கும் இன்னும் பல நுாற்றாண்டுகள் வெற்றிகரமாக இயங்க வேண்டும். ஆர்.எஸ்.எஸ்., இயக்கத்தை சார்ந்த காரியகர்த்தாக்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது வாழ்த்துகள்.இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.