/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வெள்ளம் பாதித்த பகுதிகளில் பொதுமக்களுக்கு முதல்வர் ஆறுதல்
/
வெள்ளம் பாதித்த பகுதிகளில் பொதுமக்களுக்கு முதல்வர் ஆறுதல்
வெள்ளம் பாதித்த பகுதிகளில் பொதுமக்களுக்கு முதல்வர் ஆறுதல்
வெள்ளம் பாதித்த பகுதிகளில் பொதுமக்களுக்கு முதல்வர் ஆறுதல்
ADDED : டிச 05, 2024 06:46 AM

அரியாங்குப்பம்: வெள்ளம் பாதித்த டி.என்.,பாளையம் பகுதியை முதல்வர் ரங்கசாமி பார்வையிட்டு, மக்களுக்கு ஆறுதல் கூறினார்.
புதுச்சேரியில் புயல் காரணமாக கன மழை கொட்டி தீர்த்தது. பல இடங்கள் வெள்ளக்காடாக காட்சி அளித்தன.சாத்தனுார் அணையில் இருந்து 2 லட்சம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டதால், கடலுார் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
பெண்ணை ஆற்றின் வெள்ள நீர், பாகூர் பகுதியில் இருந்து, மலட்டாறு வழியாக, தவளக்குப்பம் அடுத்து டி.என்., பாளையம் இருளர் குடியிருப்புக்குள் புகுந்தது.
அங்கிருந்த 50க்கும் மேற்பட்டவர்களை தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்டு, அருகில் உள்ள அரசு பள்ளியில் தங்க வைத்தனர்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைமுதல்வர் ரங்கசாமி பார்வையிட்டார். பின் பள்ளியில் தங்கியுள்ள மக்களை சந்தித்து, ஆறுதல், கூறினார். சபாநாயகர் செல்வம், அதிகாரிகள் உடனிருந்தனர். தொடர்ந்து, மழையால் பாதித்த அபிேஷகப்பாக்கம், தேடுவார்நத்தம் ஆகிய பகுதிகளை முதல்வர் பார்வையிட்டார்.