ADDED : நவ 01, 2024 05:34 AM

புதுச்சேரி: முன்னாள் பாரதப் பிரதமர் இந்திரா நினைவு நாள் புதுச்சேரி அரசு சார்பில் அனுசரிக்கப்பட்டது.
இதனையொட்டி 100 அடி சாலை - விழுப்புரம் சாலை சந்திப்பில் அமைந்துள்ள அவரது சிலைக்கு முதல்வர் ரங்கசாமி, அமைச்சர்கள் லட்சுமிநாராயணன், சாய்சரவணன் குமார், துணை சபாநாயகர் ராஜவேலு, அரசு கொறடா ஆறுமுகம், எம்.எல்.ஏ.க்கள் ரமேஷ், பாஸ்கர் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
நிகழ்ச்சியில், சர்வமதப் பிரார்த்தனையுடன் தேசபக்திப் பாடல்கள் இசைக்கப்பட்டன. தொடர்ந்து இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி அனுசரிக்கப்பட்டது.
இதேபோல் காங்., அலுவலகத்தில் இந்திரா நினைவு நாள், மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., முன்னாள் முதல்வர் நாராயணசாமி தலைமையில் அனுசரிக்கப்பட்டது. இந்திரா படத்திற்கு மலர் துாவி அஞ்சலி செலுத்தப்பட்டது. வன்முறைக்கு எதிராக உறுதிமொழி ஏற்கப்பட்டது,.
தொடர்ந்து, 100 அடி சாலையில் உள்ள இந்திரா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சிகளில் காங்., சட்டசபை தலைவர் வைத்தியநாதன், முன்னாள் அரசு கொறடா அனந்தராமன் உள்பட பலர் பங்கேற்றனர்.
