/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ரூ. 3.25 கோடியில் 15 ஸ்மார்ட் நிழற்குடை பணிகளை முதல்வர் துவக்கி வைத்தார்
/
ரூ. 3.25 கோடியில் 15 ஸ்மார்ட் நிழற்குடை பணிகளை முதல்வர் துவக்கி வைத்தார்
ரூ. 3.25 கோடியில் 15 ஸ்மார்ட் நிழற்குடை பணிகளை முதல்வர் துவக்கி வைத்தார்
ரூ. 3.25 கோடியில் 15 ஸ்மார்ட் நிழற்குடை பணிகளை முதல்வர் துவக்கி வைத்தார்
ADDED : நவ 15, 2024 04:16 AM

புதுச்சேரி: ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், புதுச்சேரியில் 15 இடங்களில் 3.25 கோடி ரூபாயில் ஸ்மார்ட் நிழற்குடைகள் அமைக்கும் பணியை முதல்வர் ரங்கசாமி துவக்கி வைத்தார்.
புதுச்சேரியில் போக்குவரத்து துறை சார்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 3.25 கோடி ரூபாய் செலவில் ஸ்மார்ட் நிழற்குடைகள் அமைக்கப்பட உள்ளது.
தட்டாஞ்சாவடி எஸ்டேட் சந்திப்பு, இந்திரா சதுக்கம், ராஜிவ் சதுக்கம், சுப்பையா சாலை ரயில்நிலையம், மறைமலையடிகள் சாலை புது பஸ்டாண்ட், ராஜா தியேட்டர் சிக்னல், வெங்கடசுப்பாரெட்டியார் சிலை, பட்டேல் சாலை, சுப்பையா சாலை உள்பட 15 இடங்களில் நிழற்குடைகள் அமைக்கப்பட உள்ளன.
தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டை பஸ் நிறுத்தத்தில் ஸ்மார்ட் நிழற்குடை அமைக்கும் பணியை முதல்வர் ரங்கசாமி நேற்று துவக்கி வைத்தார்.
போக்குவரத்து ஆணையர் சிவக்குமார், துணை ஆணையர் குமரன், வட்டார போக்குவரத்து அதிகாரி சீத்தாராமராஜூ கலந்து கொண்டனர்.
போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறுகையில், ஸ்மார்ட் நிழற்குடைகளில் சி.சி.டி.வி., எல்.இ.டி., விளக்கு, மொபைல் சார்ஜ் பாயிண்ட், மாற்றுத்திறனாளிகளுக்கு சாய்வுதளம் என அனைத்து வசதிகளும் இடம் பெற உள்ளது.
பஸ்கள் வந்து செல்லும் நேரம் உடனடிக்குடன் அறிவிக்கப்படும். நிழற்குடையில் இரண்டு எல்.இ.டி., பேனல்கள் பொருத்தப்படும்.
அதில் ஒன்று பஸ்கள் வந்து செல்லும் நேரத்தை குறிப்பிடும். மற்றொன்று தனியார் நிறுவனத்தின் விளம்பரம் இடம் பெறும்.
இப்பணி மூன்று மாதத்திற்குள் முடிந்து பயன்பாட்டிற்கு வந்து விடும்' என்றனர்.