/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
காலாப்பட்டில் வளர்ச்சி பணி முதல்வர் துவக்கி வைப்பு
/
காலாப்பட்டில் வளர்ச்சி பணி முதல்வர் துவக்கி வைப்பு
காலாப்பட்டில் வளர்ச்சி பணி முதல்வர் துவக்கி வைப்பு
காலாப்பட்டில் வளர்ச்சி பணி முதல்வர் துவக்கி வைப்பு
ADDED : மார் 09, 2024 02:46 AM

புதுச்சேரி: காலாப்பட்டில் ரூ.1.70 கோடி மதிப்பீட்டில் தொகுதி வளர்ச்சி திட்ட பணிகளை முதல்வர் ரங்கசாமி துவக்கி வைத்தார்.
தொகுதி மேம்பாட்டு நிதியில், 40 லட்சம் ரூபாயில் கணகசெட்டிக்குளம் முதல் இ.சி.ஆர்., பிள்ளைச்சாவடி வரை சாலை மறுசீரமைப்பு பணி, 1.30 கோடி மதிப்பில் புதுச்சேரி தொழில்நுட்பட பல்கலைக்கழகத்தில் கேண்டீன் கட்டடம் கட்டுவது உள்ளிட்ட பணிகளுக்கான பூமி பூஜை நடந்தது.
நிகழ்ச்சியில், கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார். பணிகளை முதல்வர் ரங்கசாமி துவக்கி வைத்தார்.
அமைச்சர் லட்சுநாராயணன், தொழில்நுட்ப பல்கலைக்கழக துணை வேந்தர், பேராசிரியர்கள், பொதுப்பணித்துறை அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண் டனர்.