தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/தீபாவளி மளிகை தொகுப்பு முதல்வர் துவக்கி வைப்பு

தீபாவளி மளிகை தொகுப்பு முதல்வர் துவக்கி வைப்பு

தீபாவளி மளிகை தொகுப்பு முதல்வர் துவக்கி வைப்பு


UPDATED : நவ 01, 2026 08:39 PM

ADDED : நவ 01, 2026 08:36 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 01, 2026 08:39 PM ADDED : நவ 01, 2026 08:36 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: தீபாவளி மளிகை பொருட்கள் தொகுப்பை முதல்வர் ரங்கசாமி வழங்கி துவக்கி வைத்தார்.

தீபாவளி பண்டிகையையொட்டி தகுதியுள்ள 3 லட்சத்து 50 ஆயிரத்து 793 ரேஷன் கார்டு தாரர்களுக்கு இலவச மளிகை பொருட்கள் தொகுப்பு வழங்கப்படும் என அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது.

இத்திட்டத்தை திலாஸ்பேட்டை ரேஷன் கடையில், முதல்வர் ரங்கசாமி மளிகை பொருட்கள் தொகுப்பை ரேஷன் கார்டுதாரர்களுக்கு வழங்கி துவக்கி வைத்தார்.

குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் சிவக்கொழுந்து முன்னிலை வகித்தார். அரசு கொறடா ஆறுமுகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இத்தொகுப்பில், 2 கிலோ சர்க்கரை, 2 கிலோ சமையல் எண்ணெய்,1 கிலோ கடலை பருப்பு, 300 கிராம் ரவை, 500 கிராம் மைதா ஆகிய பொருட்கள் அடங்கியுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us