/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நவீன அறுவை சிகிச்சை கூடம் முதல்வர் திறந்து வைப்பு
/
நவீன அறுவை சிகிச்சை கூடம் முதல்வர் திறந்து வைப்பு
நவீன அறுவை சிகிச்சை கூடம் முதல்வர் திறந்து வைப்பு
நவீன அறுவை சிகிச்சை கூடம் முதல்வர் திறந்து வைப்பு
ADDED : பிப் 07, 2026 03:12 AM

புதுச்சேரி: கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லுாரியில் ரூ.28.92 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள நவீன அறுவை சிகிச்சை கூடங்களை முதல்வர் திறந்த வைத்தார்.
கதிர்காமம் இந்திராகாந்தி மருத்துவக் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில்ரூ.28.92 கோடி மையப்படுத்தப்பட்ட குளிரூட்டும் வசதி மற்றும் அறுவை சிகிச்சைக்கான நவீன மருத்துவ உபகரணங்கள், தீயணைப்பு வசதிகளுடன் 11 நவீன அறுவை சிகிச்சை கூடங்கள் புதிதாக கட்டப்பட்டது.
இந்த அறுவை சிகிச்சை கூடங்களை நேற்று நடந்த விழாவில் முதல்வர் ரங்கசாமி திறந்து வைத்து, நவீன கருவிகளை இயக்கி வைத்தார்.
விழாவில்,ரமேஷ் எம்.எல்.ஏ., சுகாதாரத்துறைசெயலர் சவுத்திரி முகமது யாசின், இயக்குநர் உதயசங்கர் உட்பட பலர் உடனிருந்தனர்.