தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மண்டல அறிவியல் கண்காட்சி முதல்வர் துவக்கி வைப்பு

 மண்டல அறிவியல் கண்காட்சி முதல்வர் துவக்கி வைப்பு

 மண்டல அறிவியல் கண்காட்சி முதல்வர் துவக்கி வைப்பு


ADDED : ஜன 07, 2026 05:28 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 07, 2026 05:28 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: கதிர்காமம் அரசு பெண்கள் மேல் நிலைப் பள்ளியில், புதுச்சேரி மண்டல அறிவியல் கண்காட்சியை முதல்வர் துவக்கி வைத்தார்.

பள்ளிக் கல்வி இயக்கத்தின் சார்பில், 2025 -26ம் கல்வியாண்டிற்கான 'நிலையான எதிர்காலத்திற்கான அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்' எனும் தலைப்பில் நடந்த அறிவியல் கண்காட்சியை முதல்வர் ரங்கசாமி துவக்கி வைத்தார்.

சபாநாயகர் செல்வம், அமைச்சர் நமச்சிவாயம், ரமேஷ் எம்.எல்.ஏ., ஆகியார் பங்கேற்றனர்.கண்காட்சியில், துவக்க நிலையில் 82 படைப்புகள், நடுநிலையில் 121 படைப்புகள், உயர்நிலையில் 96 படைப்புகள், மேல்நிலையில் 61 படைப்புகள் மற்றும் ஆசிரியர்களின் 19 படைப்புகள் என, மொத்தம் 382 அறிவியல் படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன.

ஏற்பாடுகளை, கல்வித்துறை இணை இயக்குநர் சிவகாமி தலைமையில், ஒருங்கிணைப்பாளர் மோகன் பிரசாத் உள்ளிட்ட பலர் செய்துள்ளனர்.கண்காட்சியினை புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் பார்வையிட்டு வருகின்றனர். கண்காட்சி வரும் 10ம் தேதி வரை நடக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us