/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதைவட மின் கேபிள் பணி முதல்வர் துவக்கி வைப்பு
/
புதைவட மின் கேபிள் பணி முதல்வர் துவக்கி வைப்பு
ADDED : அக் 09, 2025 11:28 PM

புதுச்சேரி: தட்டாஞ்சாவடி தொகுதிக்குட்பட்ட சுப்பையா நகரில் 1 கோடியே 82 லட்சம் ரூபாய் செலவில் புதைவட கேபிள் அமைக்கும் பணியை முதல்வர் ரங்சாமி துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் அமைச்சர் லட்சுமிநாராயணன், அரசு கொறடா ஆறுமுகம் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.
இப்பணி மூலம் 10 கி.மீ., தொலைவிற்கு புதைவட கேபிள் அமைத்து 300 வீடுகளுக்கும் 36 தெரு விளக்குகளுக்கும் தடையில்லா மின்சாரம் விநியோகிக்கப்பட உள்ளது.
நிகழ்ச்சியில் மின் துறை செயலர் முத்தம்மா, மின் துறைதலைவர் கனியமுதன், கண்காணிப்பு பொறியாளர்-2 ரமேஷ், செயற்பொறியாளர் ஸ்ரீதர், உதவி பொறியாளர்கள் சசிகுமார், சந்திரசேகர், இளநிலை பொறியாளர்கள் லோகநாயகி பிகோத், சிவராஜ்,சுப்பையா நகர் நல வாழ்வு கழக தலைவர் பத்மநாபன், சேக்கிழார் அரசு உயர்நிலைப் பள்ளியின் மேலாண்மை குழு தலைவர் நாகராஜன்உள்பட பலர் கலந்து கொண்டனர்.