ADDED : பிப் 23, 2026 04:29 AM

அ நிறம் | அளவு
புதுச்சேரி: லாஸ்பேட்டை தொகுதியில்நலத்திட்ட உதவிகள் வழங்குவதை முதல்வர் ரங்கசாமி துவக்கி வைத்தார்.
லாஸ்பேட்டை தொகுதியில் நலத்திட்ட உதவிகளை என்.ஆர். காங்., சார்பில் முன்னாள் சபாநாயகர் சிவக்கொழுந்து தொடர்ந்து செய்து வருகிறார். இந்நிலையில் தொகுதியில் உள்ள மக்களுக்கு வீட்டு உபயோக பொருட்களை வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்தார்.
அதற்கான நலத்திட்ட உதவியை கோரிமேடு, அப்பா பைத்தியம் சுவாமி கோவிலில் முதல்வர் ரங்கசாமி துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் முன்னாள் சபாநாயகர் சிவக்கொழுந்து, சப்தகிரி அறக்கட்டளை பொறுப்பாளர் ரமேஷ்,என்.ஆர்.காங்., பிரமுகர்கள் மற்றும் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர். தொடர்ந்து, லாஸ்பேட்டை தொகுதியில் உள்ளமக்களுக்கு வீட்டு உபயோக பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
