/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
5 பேருக்கு பணி நிரந்தரம் முதல்வர் ஆணை வழங்கல்
/
5 பேருக்கு பணி நிரந்தரம் முதல்வர் ஆணை வழங்கல்
ADDED : டிச 04, 2024 05:42 AM

புதுச்சேரி: புதுச்சேரியில் சமையல்காரர், உணவு பரிமாறுபவர்களாக பணி நிரந்தரம் செய்யப்பட்ட, 5 பேருக்கு முதல்வர் ரங்கசாமி, அதற்கான ஆணையை வழங்கினார்.
புதுச்சேரி அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை விடுதிகளில் பணிபுரிந்து வரும் முழு நேர தினக்கூலி ஊழியர்கள் அவர்களை உதவி சமையல்காரர் மற்றும் உணவு பரிமாறுபவர்கள் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்தனர்.
இக்கோரிக்கையை ஏற்று, 5 முழுநேர தினக்கூலி ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய முதல்வர் உத்தரவிட்டார். இதன் அடிப்படையில், 5 பேர் சமையல்காரர் மற்றும் உணவு பரிமாறுபவர்களாக பணி நிரந்தரம் செய்யப்பட்டனர்.
அதற்கான ஆணையை முதல்வர் ரங்கசாமி, சட்டசபை அலுவலத்தில் நேற்று வழங்கினார். இந்த நிகழ்வில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை இயக்குநர் இளங்கோவன், துறை அதிகாரிகள் ஆகியோர் உடன் இருந்தனர்.