/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தீயணைப்பு துறைக்கு வாகனம் :முதல்வர் துவக்கி வைப்பு
/
தீயணைப்பு துறைக்கு வாகனம் :முதல்வர் துவக்கி வைப்பு
தீயணைப்பு துறைக்கு வாகனம் :முதல்வர் துவக்கி வைப்பு
தீயணைப்பு துறைக்கு வாகனம் :முதல்வர் துவக்கி வைப்பு
ADDED : டிச 16, 2025 05:41 AM

புதுச்சேரி: தீயணைப்பு துறைக்கு புதியதாக வாங்கப்பட்டுள்ள வாகனங்களை முதல்வர் ரங்கசாமி கொடியசைத்து துவக்கி வைத்தார்.
புதுச்சேரி அரசு தீயணைப்பு துறைக்கு ரூ. 3.84 கோடி மதிப்பில் புதிதாக 5 சிறிய தீயணைப்பு வாகனம், 3 நீருந்து வாகனங்கள் வாங்கப்பட்டு, ஒப்படைக்கும் நிகழ்ச்சி மற்றும் துவக்க விழா கடற்கரை சாலை காந்தி திடலில் நடந்தது
நிகழ்ச்சியில் முதல்வர் ரங்கசாமி கலந்து கொண்டு வாகனங்களை கொடியசைத்து துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் சபாநாயகர் செல்வம், பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன், பாஸ்கர் எம்.எல்.ஏ, ஆகியோர் கலந்து கொண்டனர்.
புதியதாக வாங்கப்பட்ட வாகனங்கள் புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாம் பகுதிகளில் உள்ள பல்வேறு தீயணைப்பு நிலையங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு பொது சேவைக்கு அர்ப்பணிக்கப்பட உள்ளது.