/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
முதல்வர், அமைச்சர் ஆசிரியர் தின வாழ்த்து
/
முதல்வர், அமைச்சர் ஆசிரியர் தின வாழ்த்து
ADDED : செப் 05, 2025 03:01 AM
புதுச்சேரி: ஆசிரியர் தினத்தையொட்டி முதல்வர், அமைச்சர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
முதல்வர் ரங்கசாமி விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், மாணவர்களின் வழிக்காட்டியாகவும், மாற்றத்திற்கான வினையூக்கியாகவும், கல்வி மற்றும் பண்பு இரண்டையும் வடிவமைக்கும் சக்தியாக விளங்கக்கூடிய ஆசிரியர்களுக்கு, ஆசிரியர் தின வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.
அமைச்சர் நமச்சிவாயம் மாணவர்களின் திறமைகளை கண்டறிந்து, அவர்களின் கனவுகளை நினைவாக்க அறிவை மட்டுமன்றி அன்பையும் விதைத்து வழிகாட்டும் ஆசிரியர்களுக்கு, ஆசிரியர் தின வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.
எதிர்க்கட்சி தலைவர் சிவா அறிவியல் பூர்வமாகவும், ஆய்வுப்பூர்வமான கல்வியை மாணவர்களுக்கு வழங்கி, எதிர்கால தமிழ் சமூகத்தின் துாண்களாக உருவாக்கும் ஆசிரியர்களுக்கு வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.
இதேபோன்று ஓணம் பண்டிகை மற்றும் மிலாடி நபி பண்டிகை கொண்டாடும் மலையாளிகள் மற்றும் இஸ்லாமியர்களுக்கு கவர்னர், முதல்வர், அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.