/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அரும்பார்த்தபுரம் பைபாஸ் சாலையில் மின்விளக்குகள் அமைக்க முதல்வர் உத்தரவு

ADDED : டிச 31, 2024 05:54 AM
புதுச்சேரி: அரும்பார்த்தபுரம் பைபாஸ் சாலையில் மின்விளக்குகள், பிரதிபலிப்பான்களுடன் கூடிய சிக்னல் அமைக்க முதல்வர் ரங்கசாமி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
புதுச்சேரி நுாறடிசாலை மேம்பாலத்தில் இருந்து அரும்பார்த்தபுரத்திற்கு 4.5 கி.மீட்டருக்கு பைபாஸ் சாலை அமைப்பதற்கான இறுதிகட்ட பணிகள் நடந்து வருகிறது.
இதையொட்டி, அச்சாலை வழியாக தற்போது பைக், கார் உள்ளிட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. இதற்கிடையே, இச்சாலை வழியாக இயக்கப்படும் வாகனங்கள் அதிவேகமாக செல்வதால், அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. அதனை தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி, அரசு கொறடா ஆறுமுகம், முதல்வர் ரங்கசாமியிடம் கோரிக்கை வைத்தார்.
இதையடுத்து, முதல்வர் ரங்கசாமி அரும்பார்த்தபுரம் பைபாஸ் சாலை பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பைபாஸ் சாலை அமைக்கும் பணியினை விரைந்து முடித்து, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும்.
விபத்துகளை தவிர்க்கும் வகையில் சாலையின் இருபுறமும் மின் விளக்குகள், பிரதிபலிப்பான்களுடன் கூடிய சிக்னல் அமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.