/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கார்கில் வெற்றி தினம் முதல்வர் மரியாதை
/
கார்கில் வெற்றி தினம் முதல்வர் மரியாதை
ADDED : ஜூலை 27, 2025 12:19 AM

புதுச்சேரி : கார்கில் வெற்றி தினத்தையொட்டி, போர் வீரர்கள் நினைவுச் சின்னத்தில், முதல்வர் ரங்கசாமி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
கார்கில் வெற்றி தினத்தை யொட்டி, போரில் உயிர் நீத்த வீரர்களுக்கு புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள போர் வீரர்கள் நினைவுச் சின்னத்தில், நேற்று மரியாதை செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில், முதல்வர் ரங்கசாமி, மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து வீரர்களுக்கு 2 நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில், சபாநாயகர் செல்வம், அமைச் சர் கள் நமச்சிவாயம், லட்சுமி நாராயணன், திருமுருகன், துணை சபாநாயகர் ராஜவேலு, அரசு கொறாடா ஆறுமுகம், எம்.எல்.ஏ.,க்கள் பாஸ்கர், ரமேஷ், லட்சுமிகாந்தன், தலைமை செயலர் சரத் சவுகான், டி.ஐ.ஜி., சத்தியசுந்தரம், அரசு செயலர் முகமது அசன் அபித், கலெக்டர் குலோத்துங்கன், இந்திய கடலோர காவல் படை, தேசிய மாணவர் படை அதிகாரிகள், முன்னாள் ராணுவ வீரர்கள் உட்பட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.