/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
முதியோர் உதவித்தொகை முதல்வர் வழங்கல்
/
முதியோர் உதவித்தொகை முதல்வர் வழங்கல்
ADDED : நவ 30, 2024 04:56 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : இந்திரா நகர் தொகுதியைச் சேர்ந்த பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகையினை முதல்வர் ரங்கசாமி வழங்கினார்.
புதுச்சேரி மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை சார்பில், இந்திரா நகர் தொகுதியைச் சேர்ந்த 100 பயனாளிகளுக்கு முதியோர், விதவை, கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், முதிர்கன்னிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
முதல்வர் ரங்கசாமி பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகைக்கான ஆணையினை வழங்கினார். நிகழ்ச்சியில், அரசு கொறடா ஆறுமுகம், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை இயக்குநர் (பொ) இளங்கோவன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

