/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இரண்டு வாரத்தில் இலவச அரிசி முதல்வர் ரங்கசாமி தகவல்
/
இரண்டு வாரத்தில் இலவச அரிசி முதல்வர் ரங்கசாமி தகவல்
இரண்டு வாரத்தில் இலவச அரிசி முதல்வர் ரங்கசாமி தகவல்
இரண்டு வாரத்தில் இலவச அரிசி முதல்வர் ரங்கசாமி தகவல்
ADDED : டிச 27, 2024 06:14 AM

புதுச்சேரி: புதுச்சேரி அரசு குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை சார்பில், தேசிய நுகர்வோர் தின விழா நடந்தது.
கருவடிக்குப்பம் காமராஜர் மணிமண்டபத்தில் நடந்த விழாவிற்கு, துறை இயக்குனர் சத்தியமூர்த்தி வரவேற்றார். மாநில நுகர்வோர் ஆணைய தலைவர் சுந்தரவடிவேலு, மாவட்ட நுகர்வோர் ஆணைய தலைவர் முத்துவேல் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
விழாவில், முதல்வர் ரங்கசாமி பங்கேற்று, நுகர்வோர் அமைப்புகளுக்கு நினைவு பரிசு வழங்கி பேசுகையில், 'புதுச்சேரியில் கடந்த காலங்களில் ரேஷன் கடைகள் எப்படி இருந்தது. எத்தனை பொருட்கள் வழங்கப்பட்டது என்பது அனைவருக்கும் தெரியும்.
இடையே கடைகள் மூடப்பட்டு, அரிசிக்கு பதில் பணமாக வழங்கப்பட்டது. ஆனால், மக்கள் இலவச அரிசி வழங்கும் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டுமென கோரிக்கை வைத்தனர்.
அதன்படி, தற்போது ரேஷன் கடைகள் திறக்கப்பட்டு, தீபாவளிக்கு 10 கிலோ அரிசி மற்றும் சர்க்கரை வழங்கப்பட்டது.
தொடர்ந்து, 10 மற்றும் 20 கிலோ இலவச அரிசி இரண்டு வாரத்தில் ரேஷன் கடைகள் மூலம் தொடர்ந்து வழங்கப்படும். மற்ற பொருட்களையும் ரேஷன் கடைகள் மூலம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மாநில அளவிலான வீடியோ கன்பரன்ஸ் மூலம் நடத்தப்படும் நுகர்வோர் குறை தீர்வு கூட்டம், மாவட்ட அளவில் நடத்தவும் அரசு நடவடிக்கை எடுக்கும். இத்துறைக்கான நிதி ரூ.10 கோடி ஒதுக்கி தரப்பட்டுள்ளது.
அதன் மூலம் வரும் வட்டியை கொண்டு, பொதுமக்களுக்கு விழிப்புணர்வுகளை ஏற்படுத்துவது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டும். விழிப்புணர்வு விளம்பரங்களை அதிகப்படுத்த வேண்டும்' என்றார்.
துறை துணை இயக்குனர் தயாளன் நன்றி கூறினார்.