தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ உட்கட்டமைப்பு, நலத்திட்டங்களுக்கு ரூ.3 ஆயிரம் கோடியில் பணிகள் முதல்வர் ரங்கசாமி தகவல்

 உட்கட்டமைப்பு, நலத்திட்டங்களுக்கு ரூ.3 ஆயிரம் கோடியில் பணிகள் முதல்வர் ரங்கசாமி தகவல்

 உட்கட்டமைப்பு, நலத்திட்டங்களுக்கு ரூ.3 ஆயிரம் கோடியில் பணிகள் முதல்வர் ரங்கசாமி தகவல்


ADDED : மார் 11, 2026 04:01 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 11, 2026 04:01 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: சர்வதேச, தேசிய மற்றும் தென்மண்டல விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வென்ற புதுச்சேரி விளையாட்டு வீரர்களுக்கு பரிசு வழங்கும் விழா கம்பன் கலையரங்கில் நடந்தது.

விழாவில் முதல்வர் ரங்கசாமி பேசியதாவது:

இது ஒரு துவக்க விழா தான். வரும் காலத்தில் அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் உரிய நிதியைப் பிரித்துக் கொடுப்போம். விளையாட்டு துறைக்கு முக்கியத்துவம் கொடுக்க விளையாட்டுக்கெனத் தனித் துறை கொண்டு வந்தோம்.

தற்போது பயிற்சியாளர்களுக்கு வழங்கப்பட்ட 10 ஆயிரம் ரூபாய், இன்று அது 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்திக் கொடுக்கப்படுகிறது. புதுச்சேரியில் பல சங்கங்களைச் சேர்ந்த வீரர்கள் வட மாநில விளையாட்டு போட்டிக்கு செல்ல நிதி கேட்டு வந்தனர். இனி வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களுக்குச் செல்பவர்களுக்குத் தனியாக நிதி ஒதுக்கப்படும்.

அரசின் கோரிக்கையை ஏற்று மத்திய அமைச்சர் புதுச்சேரி விளையாட்டுத் துறைக்காக 200 கோடி ரூபாய் ஒதுக்கி இருக்கிறார். அதன் மூலம் கிராமங்களில் நிறைய விளையாட்டுத் திடல்களை உருவாக்க இருக்கிறோம்.

​நமது அரசு பொறுப்பேற்றது முதல் பல உள்விளையாட்டு அரங்குகளை கட்டி வருகிறது. பாகூரில் ஒரு விளையாட்டு அரங்கம் திறக்கப்பட்டது. கதிர்காமத்தில் 13 கோடி ரூபாய் மதிப்பில் உள்விளையாட்டு அரங்கம் கட்டி வருகிறோம். விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்றவர்களை அரசு துறையில் பணியமர்த்தியுள்ளோம்.

சேதராப்பட்டு - கரசூர் பகுதியில் தொழிற்சாலைகள் வருவதன் மூலம் 40 முதல் 50 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும். அனைத்துத் தொகுதிகளிலும் உட்கட்டமைப்பை ஏற்படுத்தவும், நலத்திட்டங்களை செய்யவும் ரூ. 3 ஆயிரம் கோடிக்கும் மேல் நிதி ஒதுக்கிப் பணிகள் நடந்து வருகின்றன.

​மாணவர்களுக்குக் கல்வி உதவித்தொகையாக ரூ. 27 கோடியும், அரசுப் பள்ளியில் படித்த 37 மாணவர்கள் 10 சதவீத இடஒதுக்கீட்டில் இலவசமாக மருத்துவம் படித்து வருகின்றனர். மருத்துவத்துறையில் 13 கோடி ரூபாயில் பணிகள் நடந்து வருகின்றன. புதுச்சேரியில் கல்வி, சுகாதாரம் என, அனைத்திலும் நமது அரசு அக்கறையோடு செயல்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us