தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தட்டாஞ்சாவடி தொகுதியில் முதல்வர் ரங்கசாமி ஓட்டு சேகரிப்பு 

 தட்டாஞ்சாவடி தொகுதியில் முதல்வர் ரங்கசாமி ஓட்டு சேகரிப்பு 

 தட்டாஞ்சாவடி தொகுதியில் முதல்வர் ரங்கசாமி ஓட்டு சேகரிப்பு 


ADDED : ஏப் 06, 2026 09:29 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 06, 2026 09:29 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: தட்டாஞ்சாவடி தொகுதியில் முதல்வர் ரங்கசாமி ஓட்டுசேகரித்தார்.

தட்டாஞ்சாவடி தொகுதி திலகர் நகர், மோகன் நகர், வி.வி.பி., நகர், கவுண்டம்பாளையம், நவசக்தி நகர் ஆகிய பகுதிகளில் முதல்வர் ரங்கசாமி ஜக்கு சின்னத்திற்கு நேற்று ஓட்டு சேகரித்தார்.

அப்போது முதல்வர் ரங்கசாமி பேசியதாவது: புதுச்சேரியில் என்.ஆர்.காங்., ஆட்சியில் முதியோர்கள் மற்றும் மகளிர் உதவித்தொகை உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு உதவித்தொகை, லேப்டாப் வழங்கி இருக்கிறோம். இலவச அரிசி, கோதுமை என அனைத்து நலத்திட்டங்களும் நிறைவேற்றி இருக்கிறோம்.

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை நமது என்.ஆர்.காங்., அரசால் மட்டும் தான் உறுதி செய்ய முடியும். நமது ஆட்சி தொடர்ந்தால் தான் அனைத்து தொடர்ந்து மக்களுக்கு கிடைக்கும். இதற்கு நீங்கள் ஜக்கு சின்னத்தில் ஓட்டு அளிக்கவேண்டும். மீண்டும் புதுச்சேரியில் தே.ஜ., கூட்டணி ஆட்சி அமையும் என்றார். அப்போது பொதுமக்கள் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

பிரசாரத்தின் போது என்.ஆர்.காங்., நிர்வாகிகள், கூட்டணி கட்சியினர் என பலர் கலந்துகொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us