தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ உலககோப்பை வென்ற இந்தியா முதல்வர் ரங்கசாமி வாழ்த்து

 உலககோப்பை வென்ற இந்தியா முதல்வர் ரங்கசாமி வாழ்த்து

 உலககோப்பை வென்ற இந்தியா முதல்வர் ரங்கசாமி வாழ்த்து


ADDED : மார் 10, 2026 04:09 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 10, 2026 04:09 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: உலகப்கோப்பை வென்ற இந்திய அணிக்கு முதல்வர் ரங்கசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவரது வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:

டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கிடையே நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி மூன்றாவது முறையாக டி-20 உலகக் கோப்பையை கைப்பற்றியிருப்பது நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு பெருமையையும் மகிழ்ச்சியையும் அளிப்பதாக உள்ளது.

இந்திய அணியைச் சார்ந்த இளம் வீரர்கள், ஒவ்வொருவரும் தங்களுடைய திறமையையும் அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்தி அணித்துணிவுடன் விளையாடி, இந்த மகத்தான வெற்றியை பெற்றுள்ளனர்.

இந்த வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாடி வரும் இவ்வேளையில், இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்களுக்கு புதுச்சேரி மக்களின் சார்பிலும் என் சார்பிலும் மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us