/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முதல்வர் ரங்கசாமி வாழ்த்து
/
தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முதல்வர் ரங்கசாமி வாழ்த்து
தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முதல்வர் ரங்கசாமி வாழ்த்து
தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முதல்வர் ரங்கசாமி வாழ்த்து
ADDED : பிப் 14, 2025 04:20 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் பொதுத்தேர்வு எழுத உள்ள பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு முதல்வர் ரங்கசாமி வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.
அவரது வாழ்த்து செய்தி; புதுச்சேரி மாநிலத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதவுள்ள மாணவச் செல்வங்களே நீங்கள் அனைவரும் பொதுத்தேர்வை நல்ல முறையில் எழுதத் தயாராக இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.
வாழ்க்கை வெற்றிகரமாக அமைய வேண்டும் என்றால் போட்டிகளையும், சவால்களையும் விழிப்புணர்வோடு எதிர்கொள்ள வேண்டியது அவசியம். இங்கு போட்டியென்றால், உங்கள் திறமைக்கு நீங்களே சவால் விடுத்துக் கொண்டு உங்களை நீங்களே வெற்றி கொள்வது என்பதாகும். அதற்கு நேரத்தைத் திட்டமிட்டு பயன்படுத்த வேண்டும்.
எவ்வித மன அழுத்தங்களுக்கும் இடம் கொடுக்காமல் துணிவோடும். தன்னம்பிக்கையோடும் தேர்வை மகிழ்ச்சியான மனநிலையில் அணுக வேண்டும் என, அன்போடு கேட்டுக் கொண்டு, பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவியர் அனைவரும் நல்ல முறையில் தேர்வு எழுதி அதிக மதிப்பெண்களைப் பெற்று, வாழ்வில் நல்ல நிலையை அடைய எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.