/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சேதாரப்பட்டில் 750 ஏக்கரில் புதிய தொழிற்சாலைகள் முதல்வர் ரங்கசாமி தகவல்
/
சேதாரப்பட்டில் 750 ஏக்கரில் புதிய தொழிற்சாலைகள் முதல்வர் ரங்கசாமி தகவல்
சேதாரப்பட்டில் 750 ஏக்கரில் புதிய தொழிற்சாலைகள் முதல்வர் ரங்கசாமி தகவல்
சேதாரப்பட்டில் 750 ஏக்கரில் புதிய தொழிற்சாலைகள் முதல்வர் ரங்கசாமி தகவல்
ADDED : பிப் 15, 2024 04:47 AM

புதுச்சேரி: 'தொழில் நல்லுறவு' குறித்த, ஒரு நாள் பயிற்சி முகாம் நேற்று நடந்தது.
தட்டாஞ்சாவடி, வேளாண்மை வளாகஉழவர் பயிற்சி கூடத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் தொழிலாளர் துறை ஆணையர் மாணிக்க தீபன் வரவேற்றார்.
முதல்வர் ரங்கசாமி,குத்து விளக்கேற்றி, நிகழ்ச்சியை துவக்கி வைத்து தலைமை தாங்கினார்.அரசு செயலாளர் முத்தம்மா, உரிமையியல் நீதிமன்ற நீதிபதி கீதா சிறப்புரையாற்றினர்.
மனித வள துறை மூத்த துணைத்தலைவர் ராமகிருஷ்ணன், மூத்த வக்கீல் மோகன்தாஸ் பேசினர். இந்த பயிற்சி திட்டத்தில், புதுச்சேரி மாநிலத்தில் உள்ள, 20 பெரிய, சிறு, குறு, நடுத்தர தொழிற்சாலைகளில் இருந்து, நிர்வாகம் மற்றும் தொழிலாளர்கள் தரப்பில், 100 பேர்பங்கேற்றனர்.
தொழிலாளர் அதிகாரி வெங்கடேசன் நன்றி கூறினார்.
விழாவில் முதல்வர்ரங்கசாமி பேசியதாவது:
தொழிற்சாலை சிறந்த முறையில் இயங்க நிர்வாகம், தொழிலாளர்கள் ஆகிய இருவருக்கும் இடையே, நல்ல உறவு இருக்க வேண்டும். தொழிற்சாலை நிர்வாகம்,தொழிலாளர்களை நல்ல முறையில் நடத்த வேண்டும்.
அப்போது தான், உற்பத்தி அதிகரித்து, தொழிலதிபர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். தற்போது,பல பெரிய தொழிற்சாலைகள், புதுச்சேரிக்கு வருவதற்கானவாய்ப்புகள் நிறைய உள்ளன.
சேதராப்பட்டில், 750 ஏக்கர் பரப்பளவில், பல புதிய தொழிற்சாலைகளை கொண்டு வர, அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதன் மூலம் நிறைய படித்த இளைஞர்களுக்குவேலைவாய்ப்புகள்வழங்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.

