/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அண்ணா திடல் கடைகளை வழங்க முதல்வர் ரங்கசாமி உத்தரவு
/
அண்ணா திடல் கடைகளை வழங்க முதல்வர் ரங்கசாமி உத்தரவு
அண்ணா திடல் கடைகளை வழங்க முதல்வர் ரங்கசாமி உத்தரவு
அண்ணா திடல் கடைகளை வழங்க முதல்வர் ரங்கசாமி உத்தரவு
ADDED : ஜன 22, 2025 08:48 AM

புதுச்சேரி : புதுச்சேரி அண்ணா திடலில் கட்டப்பட்டுள்ள கடைகள் இம்மாத இறுதிக்குள் வழங்கப்படும் என, முதல்வர் ரங்கசாமி வியாபாரிகளுக்கு உறுதியளித்தார். புதுச்சேரி அண்ணா திடலில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், அண்ணா திடலை அழகுபடுத்தி, வெளிப்புறமாக கடைகள் புதிதாக கட்டப்பட்டுள்ளது.
கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வந்த கட்டட பணிகள் முடிந்து தற்போது லபோர்த் வீதியில் 21 கடைகள், சின்னசுப்ராயபிள்ளை வீதியில் 79 கடைகள், அண்ணா சாலையில் 66 கடைகள் கட்டப்பட்டுள்ளன.
இதில் மேலும் 13 கடைகள் கட்டப்பட வேண்டும். மொத்தமாக 179 பேருக்கு கடைகள் வழங்கப்பட வேண்டும். கட்டப்பட்டுள்ள கடைகளுக்கு 8,000, 4,000, 2,500 என வாடகை நகராட்சி நிர்ணயித்துள்ளது.
இந்நிலையில் ஆன்லைன் மூலம் கடைகளை ஏலம் விடாமல் ஏற்கனவே அப்பகுதியில் கடை வைத்திருந்தவர்களுக்கே வழங்க கோரி நேரு எம்.எல்.ஏ., தலைமையில் கடைக்காரர்கள் நேற்று முதல்வர் ரங்கசாமியை சந்தித்து கோரிக்கை வைத்தனர்.
அதற்கு முதல்வர் ரங்கசாமி ஏற்கனவே கடை வைத்திருந்தவர்களுக்கு இம்மாத இறுதிக்குள் வழங்க உள்ளாட்சித் துறை இயக்குனர் சக்திவேலுக்கு உத்தரவிட்டார்.
புதிதாக கட்டப்பட வேண்டிய கடைகளை விரைந்து கட்டி முடித்து விடுபட்டவர்களுக்கு வழங்க அறிவுறுத்தினார். தொடர்ந்து முதல்வர் ரங்கசாமி, நேரு எம்.எல்.ஏ., உள்ளாட்சித் துறை இயக்குனர் மற்றும் அதிகாரிகளுக்கு கடைக்காரர்கள் நன்றி தெரிவித்தனர்.