/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
யோகா மூலம் மகிழ்ச்சி, ஆரோக்கியம் கிடைக்கும் முதல்வர் ரங்கசாமி பேச்சு

ADDED : மே 28, 2025 07:21 AM
புதுச்சேரி : யோகா மூலம் மகிழ்ச்சி, ஆரோக்கியம் கிடைக்கும் என முதல்வர் ரங்கசாமி பேசினார்.
புதுச்சேரி கடற்கரை சாலையில் நடந்த சர்வதேச யோகா தின விழா கவுண்டவுன் நிகழ்ச்சியில் முதல்வர் ரங்கசாமி பேசியதாவது;
புதுச்சேரி அமைதியான ஆன்மிக பூமியாகும். இங்கு யோகா விழா நடத்தப்படுவது பொறுத்தமானது. யோகா பழம் பெருமையான கலையாகும். உடல் ஆரோக்கியமாக இருக்க, மனதில் அமைதியை கொடுப்பது யோகா. முனிவர்கள் யோகா மூலம் சிறப்பான நிலையை அடைந்துள்ளனர். ஒரே பூமி, ஒரே ஆரோக்கியம் என்ற தலைப்பில் இந்த ஆண்டு யோகா திருவிழா நடத்தப்படுகிறது.
யோகா மூலம் மகிழ்ச்சி, உலக மக்கள் அனைவரும் யோகாவை பின்பற்ற பிரதமர் மோடியின் பங்கு முக்கியமானது. அனைவரும் மகிழ்ச்சியுடனும், ஆரோக்கியமாகவும், வாழ வேண்டும்.
யோகா பயிற்சி மூலம். மகிழ்ச்சி, ஆரோக்கியம் கிடைக்கிறது. அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் பள்ளிகளில், யோகா கற்றுத்தரப்படுகிறது. யோகா கலை வளர்ப்பதற்கு அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இவ்வாறு முதல்வர் பேசினார்.