மாநில அந்தஸ்தை மத்திய அரசு நிறைவேற்றி கொடுக்கும் முதல்வர் ரங்கசாமி நம்பிக்கை
மாநில அந்தஸ்தை மத்திய அரசு நிறைவேற்றி கொடுக்கும் முதல்வர் ரங்கசாமி நம்பிக்கை
ADDED : செப் 18, 2026 05:52 AM

புதுச்சேரி: காங்., கட்சி இனி எந்த நிலையும் எட்ட முடியாது என, முதல்வர் ரங்கசாமி பேசினார்.
என்.ஆர்.காங்., வேட்பாளர் அசோக் ஆனந்தை ஆதரித்து அவர் பேசியதாவது:
கடந்த சட்டசபை தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் நல்லாட்சியை கொடுக்க வேண்டும் என, வாய்ப்பு கொடுத்தீர்கள். கொண்டு வந்த திட்டங்களை சிறப்பான முறையில், செயல்படுத்தி சிறந்த ஆட்சியாக சென்று கொண்டிருக்கிறது.
தியாகிகளுக்கு ரூ.25 ஆயிரம் பென்ஷன் உயர்த்தப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு கடன் வட்டி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. முதியோர் பென்ஷன் உயர்த்தப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு ரூ.26 கோடி செலுத்தப்பட்டுள்ளது. மீனவ சமுதாய மக்களுக்கு முழுமையான கல்வி அளிக்க நிதி ஒதுக்கப்படும்.
கடந்த தட்டாஞ்சாவடி தேர்தலின்போதே, நான் ராஜினாமா செய்துவிட்டு, அசோக்ஆனந்த் வேட்பாளராக வருவார் என, கூறினேன். அதேபோல் தற்போது வந்துள்ளார். நான் காணாமல் போவேன் என நினைத்தவர்கள் தான் தற்போது காணாமல் போயுள்ளனர். எப்போதும் இவர் இங்கு தான் உள்ளார். யாருக்கு ஓட்டு போட்டால் நல்லது நடக்கும் என, நினைத்து பார்க்க வேண்டும்.
இந்த ஆட்சி தொடர்ந்து நடக்கும். இங்கு ஒருவருக்கு மற்றவர்களை மாட்டிவிடுவது தான் வேலை. அவரே மீண்டும் நின்றிருக்கலாம். அவர் கட்சி எந்த நிலையும் எட்ட முடியாது. ஆளும் கட்சியாக உள்ள நாங்கள் அசோக் ஆனந்திற்கு எந்த பதவி வேண்டுமானாலும் கொடுக்க முடியும். சொன்ன அனைத்து திட்டங்களையும் செய்தது எங்கள் அரசு. 9வது, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு டேப்லெட் வழங்கப்படும்.
மத்திய அரசிடம் கூடுதல் நிதி கேட்டுள்ளோம். மாநில அந்தஸ்தை வலியுறுத்துகிறோம். இதனை மத்திய அரசு நிறைவேற்றி கொடுக்கும் என்ற நம்பிக்க உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
