தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு முதல்வர் கடனுதவி வழங்கல்

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு முதல்வர் கடனுதவி வழங்கல்

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு முதல்வர் கடனுதவி வழங்கல்


UPDATED : நவ 13, 2026 08:06 PM

ADDED : நவ 13, 2026 08:04 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 13, 2026 08:06 PM ADDED : நவ 13, 2026 08:04 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரியில் இயங்கி வரும் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு முதல்வர் ரங்கசாமி கடனுதவிக்கான காசோலையை வழங்கினார்.

புதுச்சேரி நகர்ப்புற வளர்ச்சி முகமை மற்றும் புதுச்சேரி தொழில்துறை மேம்பாட்டு வளர்ச்சி முதலீட்டு கழகம் சார்பில், புதுச்சேரியில் இயங்கி வரும் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி புதுச்சேரியில் நடந்தது.

உணவுப்பொருள் தயாரித்தல் மற்றும் பதப்படுத்துதல், தொழிலில் ஈடுபட்டிருக்கும் உறுப்பினர்களுக்கு மூல தனத்திற்கான கடனுதவி நிதியாக பிரதம மந்திரி நுண் உணவு பதப்படுத்தும் நிறுவனங்களை முறைப்படுத்துதல் திட்டத்தின் மூலம் கடனுதவி வழங்கப்படுகிறது.

புதுச்சேரி நகராட்சியின் கீழ் இயங்கி வரும் மகளிர் சுய உதவி குழுக்களின் 32 உறுப்பினர்கள், உழவர்கரை நகராட்சியின் கீழ் இயங்கி வரும் மகளிர் சுய உதவி குழுக்களின் 240 உறுப்பினர்கள் என, மொத்தம் 272 பேருக்கு தலா 40 ஆயிரம் ரூபாய் வீதம் மொத்தம் 1 கோடியே 8 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் கடனுதவிக்கான காசோலையை முதல்வர் ரங்கசாமி வழங்கினார்.

நிகழ்ச்சியில், புதுச்சேரி நகராட்சி ஆணையர் அருண் அய்யாவு, உழவர்கரை நகராட்சி ஆணையர் வினயராஜ், நகர்ப்புற வளர்ச்சி முகமை திட்ட அதிகாரி ஸ்ரீகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us