/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ரூ.70 கோடியில் ரயில்வே மேம்பாலம் பணி இன்று முதல்வர் துவக்கி வைக்கிறார்
/
ரூ.70 கோடியில் ரயில்வே மேம்பாலம் பணி இன்று முதல்வர் துவக்கி வைக்கிறார்
ரூ.70 கோடியில் ரயில்வே மேம்பாலம் பணி இன்று முதல்வர் துவக்கி வைக்கிறார்
ரூ.70 கோடியில் ரயில்வே மேம்பாலம் பணி இன்று முதல்வர் துவக்கி வைக்கிறார்
ADDED : டிச 12, 2024 06:10 AM
புதுச்சேரி: புதுச்சேரி - கடலுார் சாலையில் ஏ.எப்.டி., அருகே 70 கோடி ரூபாய் செலவில் ரயில்வே மேம்பாலம் கட்டுமான பணி இன்று துவக்கி வைக்கப்பட உள்ளது.
புதுச்சேரி - கடலுார் சாலை ஏ.எப்.டி., லெவல் கிராசிங்கில், வாரத்திற்கு 33 லட்சத்து 32 ஆயிரத்து 868 வாகனங்கள் கடந்து செல்லுகின்றன. எனவே, ஏ.எப்.டி., லெவல் கிராசிங் ரயில்வே பாதையில் மேம்பாலம் கட்ட வேண்டும் என கோரிக்கை எழுந்தது.
இதையடுத்து ஏ.எப்.டி., லெவல் கிராசிங்கில், மேம்பாலம் கட்டுவதற்கான திட்டத்தை புதுச்சேரி அரசும், ரயில்வே துறையும் இணைந்து துவங்க உள்ளன. இந்த புதிய ரயில்வே மேம்பாலம் 630 மீட்டர் நீளத்தில் பிரம்மாண்டமாக அமைய உள்ளது.
இதில், ஒரே நேரத்தில் நான்கு வழி சாலைபோல் வாகனங்கள் செல்லலாம். புரோவிடன்ஸ் மால் நடுவில் இருந்து துவங்கும் மேம்பாலம் மில் ரோடு முன், முடிகிறது. இதுமட்டுமின்றி 4.5 மீட்டர் அகலம், 2.7 மீட்டர் உயரத்தில் ஒரு சுரங்க பாதை அமைய உள்ளது.
இந்த சுரங்க பாதை வழியாக இலகுரக வாகனங்கள் செல்ல முடியும். இந்த ரயில்வே மேம்பால கட்டுமான பணிக்கான பூமி பூஜை இன்று காலை 9:45 மணிக்கு நடக்கிறது. முதல்வர் ரங்கசாமி துவக்கி வைக்கிறார். ஓராண்டுக்குள் கட்டுமான பணி முடிந்து திறக்கப்பட உள்ளது.
இது குறித்து அமைச்சர் லட்சுமிநாராயணன் கூறுகையில், 'ரயில்வே மேம்பாலம் 70 கோடியில் கட்டப்பட உள்ளது. இதில் புதுச்சேரி அரசு 40 கோடி, ரயில்வே நிர்வாகம் 30 கோடி ரூபாய் பங்களிப்பு தொகை செலுத்துகிறது என்றார்.

