ADDED : அக் 12, 2024 05:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: விஜயதசமியை முன்னிட்டு முதல்வர் ரங்கசாமி பொதுமக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
நவராத்திரி பண்டிகையின் நிறைவை குறிக்கும் விஜயதசமி, தீமையை வெல்லும் நன்மையின் வெளிப்பாடாக நாடு முழுதும் கொண்டாடப் படுகிறது. துர்கா தேவியின் தனித்துவமான அம்சத்தை குறிக்கும் விஜய தசமி நாளில், புதிய முயற்சிகள், கல்வி மற்றும் ஆக்கப்பூர்வமான செயல்களை துவங்குவது நன்மையும், வெற்றியையும் விளைவிக்கும் என நம்பப்படுகிறது.
துர்கா தேவியின் ஆசீர்வாதம் உங்கள் வாழ்வில் வெற்றி, செழிப்பு மற்றும் மகிழ்ச்சியை கொண்டு வரட்டும் என, வாழ்த்து தெரிவித்துள்ளார்.

