/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பாகூரில் வெள்ளம் பாதித்த பகுதிகளை முதல்வர் பார்வை
/
பாகூரில் வெள்ளம் பாதித்த பகுதிகளை முதல்வர் பார்வை
ADDED : டிச 05, 2024 06:53 AM

பாகூர்: பாகூர் பகுதியில் புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் ரங்கசாமி பாார்வையிட்டார்.
பெஞ்சல் புயல் காரணமாக பாகூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் கன மழை பெய்தது. தென்பெண்ணையாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால், பாகூர், சோரியாங்குப்பம், இருளஞ்சந்தை, கொம்மந்தான்மேடு உள்ளிட்ட கிராமங்களில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் புகுந்தது. பல ஆயிரம் ஏக்கர் சம்பா பருவ பயிர்கள் வெள்ள நீரில் மூழ்கின.
முதல்வர் ரங்கசாமி, அமைச்சர் தேனீ ஜெயக்குமார், சபாநாயகர் செல்வம் ஆகியோர் பாகூர் பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேற்று காரில் சென்று பார்வையிட்டனர்.
பாகூர், குருவிநத்தம் கிராமங்களில் பார்வையிட்ட முதல்வரிடம், செந்தில்குமார் எம்.எல்.ஏ., மற்றும் விவசாயிகள் வெள்ள பாதிப்புகள் குறித்து முதல்வரிடம் விளக்கினர்.
தென்பெண்ணையாற்றின் கரையோர கிராமங்கள் தொடர்ந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வருகிறது. இதனால், வீடுகளையும், உடமைகளை இழந்து வருகிறோம். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல் பயிர்கள் அழுகும் நிலையில் உள்ளது. வெள்ள தடுப்பு நடவடிக்கை எதுவும் இல்லை.
புயல் நிவாரணத்தை பொதுவாக அறிவித்துள்ளீர்கள். புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிராம மக்களுக்கு கூடுதல் நிவாரணம் வழங்கிட வேண்டும் என்றனர்.
அதற்கு, முதல்வர் ரங்கசாமி, வரும் காலங்களில் வெள்ளத்தால் பாதிப்பு ஏற்படாத வகையில் நிரந்தர நடவடிக்கை எடுக்கப்படும் என, கூறி விட்டு புறப்பட்டார்.
ஆய்வின் போது, வேளாண் துறை இயக்குனர் வசந்தக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.