தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மாணவர்களுக்கு முதல்வர் பரிசு

 சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மாணவர்களுக்கு முதல்வர் பரிசு

 சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மாணவர்களுக்கு முதல்வர் பரிசு


ADDED : மார் 04, 2026 04:55 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 04, 2026 04:55 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: சாலை பாதுகாப்பு மாத நிறைவு விழாவில், சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு போட்டியில் மாணவர்களுக்கு முதல்வர் ரங்கசாமி பரிசு வழங்கினார்.

புதுச்சேரி போக்குவரத்து துறை சார்பில், 38வது சாலை பாதுகாப்பு மாத விழா, கடந்த ஜனவரி மாதம் 1ம் தேதி முதல் 31ம் தேதி வரை நடந்தது. இதில், பெருகி வரும் வாகன விபத்தில் உயிரிழப்பு, ஊனம் ஏற்படுதல், வாகன சேதம் இவற்றை குறைப்பதற்காக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து மாணவர்களுக்கு போட்டி நடத்தப்பட்டது. இதன் நிறைவு விழா, போக்குவரத்துறை அலுவலகத்தில் நடந்தது. போக்குவரத்து துறை ஆணையர் அமன் சர்மா முன்னிலை வகித்தார். முதல்வர் ரங்கசாமி வெற்றிப்பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார்.

நிகழ்ச்சியில், ஆர்.டி.ஓ.,க்கள் ரமேஷ், அங்காளன், பிரபாகர ராவ், அதிகாரிகள், ஊழியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us