ADDED : டிச 02, 2024 04:58 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : புதுச்சேரியில் பெஞ்சல் புயல் காரணமாக வழக்கமாக வரும் பாண்லே பால் பல இடங்களில் வந்து சேரவில்லை. பூத்துக்களில் இருப்பு வைத்திருந்த பால் பாக்கெட்டுகளும் காலையிலே விற்று தீர்ந்து விட்டது.
நேற்று சாலையோரம் விற்கும் பால் பாக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்து விட்டது. பால் பாக்கெட் கிடைக்காமல் பலர் சிரமப்பட்டனர்.
இந்நிலையில் மழை பாதிப்புகளை ஆய்வு செய்ய வந்த முதல்வர் ரங்கசாமி நேற்று நகர பகுதியில் வலம் வந்தார்.
காமராஜர் சாலை, சாரம் பழைய கலெக்டர் அலுவகம் அருகே வந்த முதல்வர் காரை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
அப்போது முதல்வரின் பாதுகாப்பு அதிகாரி ஜெயராமன், பால் விநியோகிக்க ஏற்பாடு செய்யப்படும் என உறுதி அளித்த பின்பு முதல்வரின் காரை விடுவித்தனர்.