/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கவர்னருடன் முதல்வர் திடீர் சந்திப்பு
/
கவர்னருடன் முதல்வர் திடீர் சந்திப்பு
ADDED : நவ 30, 2024 06:39 AM
புதுச்சேரி : இலவச அரிசி கோப்பு அனுமதி தொடர்பாக கவர்னர் கைலாஷ்நாதனை, முதல்வர் ரங்கசாமி சந்தித்து பேசினார்.
புதுச்சேரியில் இலவச அரிசிக்கு பதில் வங்கி கணக்கில் பணம் செலுத்தும் முறை 7 ஆண்டுகளுக்கு முன், கொண்டுவரப்பட்டது. மாதந்தோறும் இலவச அரிசிக்கான பணம் குடும்ப தலைவி வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வந்தது.
இந்நிலையில், வங்கி கணக்கில் பணம் செலுத்துவதிற்கு பதில் ரேஷன் கடையை திறந்து அரிசி வழங்க கோரிக்கை எழுந்தது. அதன்படி முதற்கட்டமாக ரேஷன் கடைகள் திறந்து தீபாவளிக்கு 10 கிலோ அரிசி, 2 கிலோ சர்க்கரை வழங்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக மாதந்தோறும் சிவப்பு ரேஷன் கார்டுக்கு 20 கிலோ அரிசி, மஞ்சள் ரேஷன் கார்டுக்கு 10 கிலோ அரிசி வழங்கப்படும் எனவும், இலவச அரிசி டிசம்பர் மாதம் வழங்கப்படும் என தெரிவித்தார். இந்நிலையில், முதல்வர் ரங்கசாமி நேற்று மதியம் 2:30 மணிக்கு கவர்னர் மாளிகை சென்று, கவர்னர் கைலாஷ்நாதனை சந்தித்து பேசினார்.
அப்போது, புதுச்சேரியில் பெஞ்சல் புயல் எதிர்கொள்ள எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கவர்னரிடம் விளக்கினார். தொடர்ந்து, சிவப்பு ரேஷன் கார்டுக்கு மாதம் 20 கிலோ இலவச அரிசி வழங்கும் மாநில அரசின் திட்டத்திற்கு அனுமதி, அரசு துறைகளின் உயர் அதிகாரிகள் இடமாற்றம் தொடர்பாகவும் ஆலோசனை நடந்தது.

