/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
'சிறுமி கொலை குற்றவாளி ஆளுங்கட்சியை சேர்ந்தவர்' : வைத்திலிங்கம் எம்.பி., குற்றச்சாட்டு

ADDED : மார் 10, 2024 05:00 AM
புதுச்சேரி : புதுச்சேரி சிறுமி கொலையில் கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளி ஆளுங்கட்சியை சேர்ந்தவர் என, வைத்திலிங்கம் எம்.பி., குற்றம் சாட்டி உள்ளார்.
அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கவர்னர் தமிழிசை போதைப்பொருட்கள் சம்மந்தமாக கூறும் குற்றச்சாட்டுகளை நிரூபிக்க வேண்டும். லோக்சபா தேர்தலில், போட்டியிடுவது குறித்து, கட்சி தலைமை என்ன சொன்னாலும், அதை செயல்படுத்த தயாராக இருக்கிறோம்.
புதுச்சேரியில் போதைப்பொருட்களை முழுமையாக அகற்ற, அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
சிறுமி படுகொலையில் கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளி ஒருவர், ஆளுங்கட்சியை சேர்ந்தவர். அதை மறைப்பதற்கு தான், காலம் தாழ்த்தி கைது செய்தனர். குற்றவாளியை தப்பிக்க வைப்பதற்கு தான், இந்த காரியத்தை செய்திருக்கின்றனர்.இதை ஆணித்தரமாக சொல்ல முடியும். சம்மந்தப்பட்ட கொலை குற்றவாளிகளுக்கு விரைவு நீதிமன்றம் மூலம் உடனே தண்டனை தர வேண்டும். புதுச்சேரியில் முருகன் பெயரைக் கொண்ட நபர் ஒருவர் தான், போதைப்பொருள் வியாபாரத்தை செய்து கொண்டிருக்கிறார்.
அவர் அதிகார வர்க்கத்தில் இருப்பவர்களுக்கு நெருக்கமானவராக இருக்கிறார்' என்றார்.