ADDED : ஜூலை 18, 2026 03:45 AM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: முத்தியால்பேட்டையை சேர்ந்தவர் பாலாஜி, 36; இவரது மனைவி தேவி பிரியங்கா. இவர்களின் ஒன்றரை மாத ஆண் குழந்தை பிரணாவ்விற்கு, ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று முன்தினம் தடுப்பூசி போட்டுள்ளனர்.
அன்று நள்ளிரவு 12 மணிக்கு பார்த்தபோது குழந்தை எந்தவித அசைவும் இன்றி மூக்கில் ரத்தம் வந்த நிலையில் இருந்தது. உடன் குழந்தையை ராஜிவ்காந்தி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு, டாக்டர் பரிசோதித்து குழந்தை இறந்து விட்டதாக தெரி வித்தார். முத்தியால்பேட்டை போலீசார் விசாரிக்கி ன்றனர்.
