/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
4 ஆண்டுகளுக்கு ஒருமுறை கொண்டாட உள்ள குழந்தைகள்
/
4 ஆண்டுகளுக்கு ஒருமுறை கொண்டாட உள்ள குழந்தைகள்
ADDED : மார் 02, 2024 10:39 PM
சூரியனை பூமி சுற்றி வர 365 நாட்கள், 5 மணி நேரம், 49 நிமிடம், 19 விநாடிகள் எடுத்து கொள்கிறது. நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை கூடுதல் நேரத்தை கூடுதலாக ஒரு நாளாக கணக்கிடப்பட்டு, 'லீப் ஆண்டு' என்ற பெயரில் 366 நாட்களாக கணக்கிடப்படுகிறது.
தற்போதைய 2024ம் ஆண்டு லீப் ஆண்டாகும். இந்தாண்டுக்கு 366 நாட்கள் உண்டு. இந்தாண்டில் மட்டும் பிப்ரவரி மாதத்தில் 28 நாட்களுக்கு பதிலாக 29 நாட்களாக இருக்கும். எனவே, பிப். 29ம் தேதி அரிதான நாளாக கொண்டாடப்படுகிறது.
இந்த நாளில் நிகழும் நிகழ்வுகளை அடுத்த 4 ஆண்டிற்கு பிறகே நினைவுகூற முடியும்.
நடப்பு லீப் ஆண்டின் பிப்ரவரி 29ம் தேதி பிறந்த குழந்தைகள், அடுத்த 3 ஆண்டு கழித்தே தங்களின் பிறந்த நாட்களை கொண்டாட முடியும்.
புதுச்சேரியில் ராஜிவ்காந்தி மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் கடந்த 29ம் தேதி மட்டும் 7 பிரசவங்கள் நடந்தது. இதில், 4 ஆண் குழந்தைகளும், 3 பெண் குழந்தைகள் பிறந்துள்ளது.
அதே நாளில், ஜிப்மர் மருத்துவமனையின் மகளிர் மற்றும் மகப்பேறு பிரிவில் 10 ஆண் குழந்தைகளும், 6 பெண் குழந்தைகளும் பிறந்துள்ளது. இதுதவிர, தனியார் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகளிலும் சில குழந்தைகள் பிறந்துள்ளது.
இந்த குழந்தைகள் தங்களின் பிறந்த நாளை, அடுத்த வரும் லீப் ஆண்டான 2028ம் ஆண்டு பிப்ரவரி 29ம் தேதி தான் கொண்டாடுவர்.இல்லாவிட்டால் பிப்ரவரி 28ம் தேதியே கொண்டாட வேண்டியது தான்.

