/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தண்டவாளத்தில் 1 ரூபாய் நாணயம் சிறுவர்களின் விபரீத விளையாட்டு அயோத்தி-ராமேஸ்வரம் விரைவு ரயில் 1 மணி நேரம் தாமதம்

ADDED : ஜன 18, 2025 06:45 AM

பண்ருட்டி : ரயில் தண்டவாளத்தில் ஒரு ரூபாய் நாணயம் நசுங்கி ஒட்டிக்கொண்டதால் அயோத்தி- ராமேஸ்வரம் ரயில் 55 நிமிடம் தாமதமாக புறப்பட்டு சென்றது.
அயோத்தி- ராமேஸ்வரம் விரைவு ரயில் எண்.22614 நேற்று விழுப்புரம்- மயிலாடுதுறை அகலப்பாதையில் வந்து கொண்டிருந்தது.
மாலை 4:45 மணிக்கு கடலுார் மாவட்டம், பண்ருட்டி ரயில் நிலையத்தை கடந்து திருவதிகை ரயில்வே கிராசிங் அருகே சென்றபோது, ரயில் சக்கரத்தில் வித்தியாசமான சத்தம் கேட்டது.
உடன் லோக்கோ பைலட் திருவதிகை ரயில்வே கேட் முன் ரயிலை நிறுத்தி, முன் சக்கரங்களை ஆய்வு செய்தார்.
அப்போது ஒரு ரூபாய் நாணயத்தை சிறுவர்கள் தண்டவாளத்தில் நீண்ட வரிசையில் வைத்து சென்றதால் ரயில் சக்கரத்தில் ஒரு ரூபாய் நாணயம் நசுங்கி ஒட்டி கொண்டுவித்தியாசமான சத்தம் ஏற்பட்டது தெரிய வந்தது.
அதனைத் தொடர்ந்து லோக்கோ பைலட், ரயிலை மெதுவாக இயக்கிச் சென்று பட்டாம்பாக்கம் ரயில் நிலையத்தில் நிறுத்தி சக்கரத்தில் நசுங்கி ஒட்டியிருந்த ஒரு ரூபாய் நாணயத்தை அகற்றிய பின் 5:40 மணிக்கு ரயில் கடலுார் நோக்கி புறப்பட்டு சென்றது.
இதனால் அயோத்தி- ராமேஸ்வரம் விரைவு ரயில் 55 நிமிடம் தாமதமாக சென்றது.