/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஏ.ஜே., பள்ளியில் குழந்தைகள் தின விழா
/
ஏ.ஜே., பள்ளியில் குழந்தைகள் தின விழா
ADDED : நவ 15, 2024 04:10 AM

புதுச்சேரி: தவளக்குப்பம் ஏ.ஜே. ,சி.பி.எஸ்.இ., பள்ளியில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது.
இதனையொட்டி குழந்தைகளுக்கு பல விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. மாணவர்கள் ஆர்வமாக பங்கேற்றனர். வகுப்பு வரியாக பெற்றோர்களுக்கும் பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.
பள்ளி கலை ஆசிரியர் முத்துகொடி தலைமையில் புகைப்படம் மற்றும் கலை திருவிழாவும் நடந்தது.
இதில் மாணவர்களின் கலை படைப்புகள், புகைப்பட தொகுப்புகள் இடம் பெற்றன. கண்காட்சியை பெற்றோர்கள், மாணவர்கள் பார்வையிட்டனர். ஏற்பாடுகளை கரோலின், டெல் பிரை பாக்கா, சாருலதா, தீபா, சீதா, ேஷாபல்லா, புஷ்பலதா, வள்ளியம்மாள் ஆகியோர் செய்திருந்தனர்.
சூர்யா குரு நன்றி கூறினார்.