/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஆரோவில் பள்ளியில் குழந்தைகள் தின விழா
/
ஆரோவில் பள்ளியில் குழந்தைகள் தின விழா
ADDED : நவ 16, 2024 05:07 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வானுார் : ஆரோவில், இசையம்பலம் பள்ளியில் குழந்தைகள் தின விழா நடந்தது.
ஆரோவில் அறக்கட்டளை வழிகாட்டுதலுடன் இசையம்பலம் பள்ளி மற்றும் அரவிந்தர் சர்வதேச கல்வி ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவை இணைந்து விழாவை நடத்தியது.
விழாவையொட்டி, இந்திய பிரதமர்களின் படங்கள் இடம் பெற்ற கண்காட்சி நடந்தது. பொதுமக்கள், ஆசிரியர்கள் கண்காட்சியை பார்வையிட்டனர்.
விழாவில் மாணவர்களின் திறமைகளைக் வெளிக்கொண்டு வரும் வகையில் விளையாட்டு, தற்காப்புக்கலை, கோலம், ஓவியம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்குப் பள்ளி தாளாளர் சஞ்சீவ் ரங்கநாதன், நிர்வாகி அனிதா ரங்கநாதன் பரிசு வழங்கினர்.

