/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
குழந்தைகள் காப்பகங்களின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
/
குழந்தைகள் காப்பகங்களின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
குழந்தைகள் காப்பகங்களின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
குழந்தைகள் காப்பகங்களின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
ADDED : ஆக 26, 2025 07:44 AM

புதுச்சேரி : புதுச்சேரி குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் ஆணையம் சார்பில் குழந்தைகள் காப்பகங்களின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
புதுச்சேரி மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு, ஆணையத் தலைவர் சிவராமன் தலைமை தாங்கினார்.
மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை இயக்குநர் முத்துமீனா, குழந்தைகள் நலனுக்காக அனைவரும் இணைந்து பாடுபட வேண்டும். குழந்தைகள் காப்பகம் நிர்வாகிகள் ஆணையத்தின் செயல்பாடுகளுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.
குழந்தைகள் காப்பகத்தில் உள்ள பிரச்னைகள் மற்றும் கோரிக்கைகளை தெரிவித்தால், அதனை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
இதில், துணை இயக்குநர் ஜெயபிரியா, ஆணைய உறுப்பினர்கள் சிவக்குமார், முருகசாமி, ஜனார்த்தனன், கார்குழலி, கோமுகி, கலைச்செல்வி மற்றும் 35 க்கும் மேற்பட்ட தனியார் குழந்தைகள் காப்பக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.