தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ அன்பாலயா பள்ளியில் குழந்தைகள் உள்விளையாட்டு அரங்கம் திறப்பு

அன்பாலயா பள்ளியில் குழந்தைகள் உள்விளையாட்டு அரங்கம் திறப்பு

அன்பாலயா பள்ளியில் குழந்தைகள் உள்விளையாட்டு அரங்கம் திறப்பு


ADDED : செப் 28, 2026 07:53 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 28, 2026 07:53 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி, சாந்தி நகரில் உள்ள அன்பாலயா மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ‘அன்பாலயா ஜம்ப் என் ஜாய்’ குழந்தைகள் உள்விளையாட்டு அரங்கம்  திறப்பு விழா நடந்தது. 

விழாவில், முதல்வர் ரங்கசாமி பங்கேற்று, உள்விளையாட்டு அரங்கத்தை திறந்து வைத்தார். விழாவில், தற்காலிக சபாநாயகர் அன்பழகன், உருளையன்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ. நேரு, பொதுப்பணித்துறை மற்றும் மின்துறை ஆணையர் மற்றும் செயலர் முத்தம்மா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தொழிலதிபர் சிவகவி அசோகன், அக்ரி கணேஷ், ஜவகர், பாலாஜி பில்டர்ஸ் கிருஷ்ணமூர்த்தி, ராகவேந்திரா ஜூவல்லர்ஸ் வேல்முருகன், கே.பி.சி., ராஜ்குமார், சுத்துகேணி பாஸ்கர், அன்பானந்தம், திருநாவுக்கரசு, ரவி பாண்டுரங்கன், சிவாலய இளங்கோவன், டாக்டர் கணேஷ், காந்தி, நாகமணி, ரத்தினவேல், சேதுராமன், செல்வராஜ், பேராசிரியர் ரவிச்சந்திரன், சித்தானந்தம், சங்கர், தமிழ்ச்செல்வன், ராமலிங்கம், கிருஷ்ணசாமி, குணா  மற்றும் பெற்றோர்கள் மாணவர்கள் உட்பட பலர் கலந்து  கொண்டனர். 

இந்த அரங்கில் குழந்தைகள் விளையாடுவதற்கும் பல்வேறு பயிற்சி செயல்பாடுகளில் ஈடுபடுவதற்கும் தேவையான இடவசதி, உபகரணங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. குழந்தைகளின் பொழுதுபோக்கு நடவடிக்கைகள் மற்றும் விளையாட்டுகளுக்கு இந்த வசதி இடமளிக்கும் என பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us