/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சிறுவர் இலக்கிய இயக்க சந்திப்பு
/
சிறுவர் இலக்கிய இயக்க சந்திப்பு
ADDED : டிச 13, 2024 05:53 AM

புதுச்சேரி: காலாப்பட்டு பாரூக் மரைக்காயர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சிறுவர் இலக்கிய இயக்கத்தின் சார்பில் 61வது சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
சிறுவர் இலக்கிய இயக்கம் மற்றும் பள்ளியின் சமுதாய நலப்பணித் திட்டம் இணைந்து நடத்திய நிகழ்ச்சிக்கு பள்ளி துணை முதல்வர் மற்றும் முதல்வர் பிரேம்குமார்ஜூலியன் தலைமை தாங்கினார்.
சிறுவர் இலக்கிய இயக்க நிறுவனர் பாரதிவாணர்சிவா நோக்க உரையாற்றினார். ஆசிரியர் மணிகண்ணடன் வரவேற்றார்.
சிறுவர்கள் மேடையில் அச்சமின்றி தோன்றி தங்கள் திறன்களை வெளிப்படுத்தவே இந்நிகழ்வு பள்ளிகள் தோறும் நடத்தப்பட்டு வருகிறது.
பள்ளியின் சமுதாய நலப்பணித்திட்ட தன்னார்வலர்கள் மற்றும் 6 மற்றும் 7ம் வகுப்பு மாணவிகள் 78 பேர் தங்கள் தனித்திறன்களை வெளிப்படுத்தினர். போட்டிகளிலப் வெற்றிபெற்றவர்களுக்கு பள்ளி துணை முதல்வர் பிரேம்குமார்ஜூலியன், தலைமையாசிரியர் சுவாமிராஜ் தர்மக்கண் ஆகியோர் பதக்கம், சுயற்கேடயம் மற்றும் புத்தகங்கள் பரிசு வழங்கினர்.நிகழ்ச்சிகளை ராஜேஸ்வரிசிவா தொகுத்து வழங்கினார்.
சமுதாய நலப்பணித் திட்ட அலுவலர் ராமகிருஷ்ணன் நன்றி கூறினார்.

