தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/சிறுவர் சிறுகதைகள் நுால் முதல்வர் ரங்கசாமி வெளியிட்டார்

சிறுவர் சிறுகதைகள் நுால் முதல்வர் ரங்கசாமி வெளியிட்டார்

சிறுவர் சிறுகதைகள் நுால் முதல்வர் ரங்கசாமி வெளியிட்டார்


ADDED : மார் 12, 2024 05:03 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 12, 2024 05:03 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி : தமிழ்மல்லனின் சிறுவர் சிறுகதைகள் நுால் மற்றும் வெல்லும் துாயதமிழ் மாத இதழின் முப்பதாம் ஆண்டு தொகுப்பை முதல்வர் ரங்கசாமி வெளியிட்டார்.

தனித்தமிழ் இயக்க தலைவர் தமிழ்மல்லனின் முக்கால் நுாற்றாண்டு விழா, பட்டனுார் ராயல் அரங்கத்தில் நடந்தது. ஆணையர் தியாகராசன் தலைமை தாங்கினார். ஆசிரியை தமிழ்க்கொடி வரவேற்றார். ஆசிரியர்கள் தமிழ்ச்செல்வி, தமிழிசைவாணி, விஜயலட்சுமி முன்னிலை வகித்தனர். விழாவில், தமிழ்மல்லன் எழுதிய சிறுவர் கதைகள் என்னும் நுால் மற்றும் வெல்லும் துாயதமிழ் மாத இதழின் முப்பதாம் ஆண்டு தொகுப்பை முதல்வர் ரங்கசாமி வெளியிட்டார். அதனை சண்முகசுந்தரம் பெற்றுக் கொண்டார்.

சிறப்பு விருந்தினர்களாக தி.க., தலைவர் வீரமணி, வி.சி.க., தலைவர் பாவாணன், மீனவ இயக்க தலைவர் மங்கையர் செல்வன், யுகபாரதி பங்கேற்றனர். விழாவில் தமிழ்மல்லன், வணிகர்கள் தங்கள் பெயர் பலகைகளை தமிழில் எழுதி வைக்க வேண்டும் என வலிறுத்தினார். மணிவாசகர் பதிப்பகம் குருமூர்த்தி, செல்வன், சிவக்குமார், தேவதாசு, வழக்கறிஞர் சங்கர், சீனு, மோகன்தாஸ், பூங்குழலி ஆகியோர் தமிழ்மல்லனை வாழ்த்தி பேசினர்.

கலைமதி, கனிமொழி ஆகியோர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர். நிகழ்ச்சியில், தமிழரிமா, தமிழ்த்தென்றல் உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us