/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கிறிஸ்து கல்லுாரி பட்டமளிப்பு விழா
/
கிறிஸ்து கல்லுாரி பட்டமளிப்பு விழா
ADDED : அக் 11, 2025 07:03 AM

புதுச்சேரி : மூலக்குளம், கிறிஸ்து பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரியில் 7வது பட்டமளிப்பு விழா, நேற்று நடந்தது.
கல்லுாரியின் மேலாண் இயக்குநர் சாம்பால் தலைமை தாங்கினார். ஜோஹோ கார்ப்பரேஷன் சென்னை நிறுவனத்தின் இணை நிறுவனர் ராஜேந்திர தண்டபாணி பங்கேற்று, பல்வேறு துறை மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கினார். கல்லுாரி முதல்வர் சிவக்குமார் வரவேற்றார். இயக்குநர் குமரவேல், தலைமை நிர்வாக அதிகாரி சுப்ரமணியம் வாழ்த்தி பேசினர்.
இதில், 2020ம் கல்வியாண்டில் பட்டம் முடித்த மாணவர்களுக்கும், பல்கலைக்கழக அளவில் தங்கப்பதக்கம் பெற்ற 19 மாணவர்கள், பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியலில் சிறப்பிடம் பிடித்த 197 மாணவர்களுக்கும் பதக்கம் மற்றும் பட்டங்கள் வழங்கப்பட்டன.
கல்லுாரி முதல்வர் சிவக்குமார் பேசுகையில், 'கல்லுாரியில் கடந்த 5 ஆண்டுகளில் 96 சதவீதம் மாணவர்கள் தேர்வுகளில் வெற்றி பெற்று பட்டம் முடித்துள்ளனர். சிறந்த பொறியியல் மற்றும் தொழில்நுட்ப வல்லுநராக வேண்டும் என்ற பலரின் கனவை இந்த கல்வி நிறுவனம் மெய்ப்படுத்தி வருகிறது. எல் அண்ட் டி, விப்ரோ போன்ற பல்வேறு முன்னணி நிறுவனங்களில் பல மாணவர்கள் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். 27 சதவீத மாணவர்கள் வெளிநாடுகளில் உயர்கல்வி பெற்று வருகின்றனர்' என்றார்.
விழாவில், சாம் பால் கல்வி அறக்கட்டளை குழுமத்தின் அனைத்து கல்லுாரி முதல்வர்கள், அனைத்து துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். தலைமை வேலைவாய்ப்பு அலுவலர் தியாகராஜன் நன்றி கூறினார்.