/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பெத்தி செமினார் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா
/
பெத்தி செமினார் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா
ADDED : டிச 25, 2024 07:57 AM

புதுச்சேரி: புதுச்சேரி பெத்தி செமினார் சி.பி.எஸ்.இ., பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா நடந்தது.
விழாவிற்கு, பள்ளி முதல்வர் பாஸ்கல்ராஜ் தலைமை தாங்கினார். விழாவில் கவர்னர் கைலாஷ்நாதன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, சர்வதேச சாதனை (கின்னஸ்) புத்தகத்தில் இடம் பெற்ற பள்ளியின் யு.கே.ஜி., மாணவர்கள் கிஷான், ஆதித்யா, அன்வித், தியாஷ், எல்.கே.ஜி., மாணவர் பிரஜ்யோத் கார்த்தி ஆகியோருக்கு, நினைவு பரிசுகள் வழங்கி பாராட்டினார்.
சிவசங்கர் எம்.எல்.ஏ., வாழ்த்தி பேசினர். பள்ளியின் முதல்வர் பாஸ்கல்ராஜ், நம்மிடம் உள்ளதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதை மனதில் ஏற்று இயேசுவிடம் காணப்பட்ட அன்பு, நம்பிக்கை, மகிழ்ச்சி, தன்னடக்கம் போன்ற பண்புகளை மற்றவர்களுக்கு பகிரப்பட வேண்டுமென மாணவர்களுக்கு ஆசீர் வழங்கினார்.
தொடர்ந்து, மாணவர்களுக்கு கிறிஸ்துமஸ் சிறப்பு பரிசு மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டன.

