/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
முத்து ரத்தினம் அரங்கம் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா
/
முத்து ரத்தினம் அரங்கம் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா
முத்து ரத்தினம் அரங்கம் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா
முத்து ரத்தினம் அரங்கம் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா
ADDED : டிச 24, 2024 05:50 AM

புதுச்சேரி: கவுண்டன் பாளையம் முத்துரத்தினம் அரங்கம் மேல்நிலைப்பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது.
விழாவிற்கு பள்ளி தாளாளர் ரத்தின ஜனார்த்தனன் தலைமை தாங்கினார். தாகூர் நகர் துாய ஆவி ஆலயம் உதவி பாதிரியார் செல்வா கலந்து கொண்டு, பள்ளியில் புதிதாக செய்யப்பட்டிருந்த குடிலை ஆசீர்வதித்து, மாணவர்களுக்கு கிறிஸ்து பிறப்பு வாழ்த்துக்களை தெரிவித்தார்.
புதுச்சேரி மாநில ஒருங்கிணைந்த கோஜிரியோ கராத்தே சங்க மாநில செயலாளர் சுந்தர்ராஜன் வாழ்த்தி பேசினார். பள்ளி முதல்வர் கவிதா சுந்தர்ராஜன் முன்னிலை வகித்தார். விழாவில், மாணவர்கள் கிறிஸ்துமஸ் தாத்தா போன்று வேடம் அணிந்து நடனமாடி இனிப்புகள் வழங்கினர். ஏற்பாடுகளை பள்ளியின் பொறுப்பாளர்கள் ஜஸ்டின், ஜீவா, நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் ஜெயந்தி, ஆசிரியர்கள் அனிதா, சுஜாதா ஆகியோர் செய்திருந்தனர்.