/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மணக்குள விநாயகர் செவிலியர் கல்லுாரியில் நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் தினம்

ADDED : டிச 10, 2024 06:38 AM

புதுச்சேரி: மணக்குள விநாயகர் செவிலியர் கல்லுாரியில் நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் தின விழா நடந்தது.
மணக்குள விநாயகர் கல்வி நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் தனசேகரன் விழாவை துவக்கி வைத்தார். செயலாளர் டாக்டர் நாராயணசாமி கேசவன் முன்னிலை வகித்தனர்.
பொருளாளர் ராஜராஜன், மருத்துவ கல்லுாரி மற்றும் மருத்துவமனை இயக்குனர் ராஜகோவிந்தன், துணை இயக்குனர் காக்னே, டீன் (அகாடெமிக்) கார்த்திகேயன், டீன் (ஆராய்ச்சி) சஞ்ஜய், மருத்துவ கண்காணிப்பாளர் பிரகாஷ், பதிவாளர் தட்சிணாமூர்த்தி, செவிலியர் கல்லுாரியின் முதல்வர் முத்தமிழ்செல்வி, துணை முதல்வர் நர்மதா, மருத்துவ அறுவை சிகிச்சை நர்சிங் துறைத் தலைவர் ஸ்ரீதேவி ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
சுவாச மருத்துவத் துறை முதல்வர் யுவராஜன் வரவேற்றார். சென்னை, சிம்ஸ் மருத்துவமனையின் நுரையீரல் நிபுணர் திருப்பதி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
மருத்துவ கல்லுாரி மற்றும் செவிலியர் கல்லுாரியின் பேராசிரியர்கள், இணை பேராசிரியர்கள், துணை பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
பின் மாணவர்களின் விழிப்புணர்வு கண்காட்சி நடந்தது. நடனம் மற்றும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு விருதுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
சுவாச மருத்துவத் துறை பேராசிரியர் பிரவின் நன்றி கூறினார்.