sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

மதுபானங்கள் விலை அதிரடி உயர்வு புதுச்சேரியில் குடிமகன்கள் 'ஷாக்'

/

மதுபானங்கள் விலை அதிரடி உயர்வு புதுச்சேரியில் குடிமகன்கள் 'ஷாக்'

மதுபானங்கள் விலை அதிரடி உயர்வு புதுச்சேரியில் குடிமகன்கள் 'ஷாக்'

மதுபானங்கள் விலை அதிரடி உயர்வு புதுச்சேரியில் குடிமகன்கள் 'ஷாக்'


ADDED : மே 29, 2025 03:16 AM

Google News

ADDED : மே 29, 2025 03:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: புதுச்சேரி அரசு நிதி நிலையை சமாளிக்க, மதுபானங்களின் விலையை அதிரடியாக உயர்த்தியுள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில், மதுபானம், பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித்துறை மூலம் கிடைக்கும் வருவாயே அரசுக்கு பிரதான நிதி ஆதாரமாக உள்ளது. குறிப்பாக, மது விற்பனைக்கு பெயர்போன புதுச்சேரியில் தெருவுக்கு தெரு மதுக்கடைகள், ரெஸ்டோ பார்கள், சாராயக் கடைகள் உள்ளன. இதன் மூலம் ஆண்டிற்கு ரூ.1,500 கோடி அளவிற்கு அரசு வருவாய் ஈட்டி வருகிறது. இதன் மூலமே அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தும் நிலை உள்ளது.

இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் நடந்த சட்டசபை கூட்டத் தொடரில், குடும்ப தலைவிக்கு மாதாந்திர உதவித் தொகை ரூ.1,000 இருந்து ரூ.2,500 ஆக உயர்வு உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை முதல்வர் அறிவித்தார். இத்திட்டங்களை செயல்படுத்த அரசுக்கு கூடுதலாக ரூ.500 கோடி தேவைப்படுகிறது.

இதனை ஈடுகட்ட, கடந்த ஏப்., 23ம் தேதி நடந்த அமைச்சரவை கூட்டத்தில், மக்களுக்கு சுமையின்றி, அரசின் வருவாயை பெருக்க முடிவு செய்யப்பட்டது. இதன்படி மது வகைகளுக்கு கலால்வரி, மதுக்கடைகளுக்கு உரிம கட்டணம், வாகனங்களின் பதிவு கட்டணம், நில வழிகாட்டி (ஜி.எல்.ஆர்.,) மதிப்பு ஆகியவற்றை உயர்த்த முடிவு செய்யப்பட்டது.

மதுபான விலை உயர்வு


அதன்படி மதுபானங்கள் மீதான கலால் வரி மற்றும் கூடுதல் கலால் வரியை உயர்த்தி கலால் துறை நேற்று அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி உள்நாட்டில் தயாரிக்கப்படும் வெளிநாட்டு மதுபானம் 750 மி.லி., பாட்டில் ரூ.10 முதல் 47 வரையிலும், 180 மி.லி., பாட்டில் ரூ.3 முதல் 11 வரையும், பீர் வகைகள் 650 மி.லி., பாட்டில் ரூ.6 முதல் 7 வரையும், ஒயின் 750 மி.லி., ரூ.13 முதல் ரூ.26 வரை உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த வரி உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்தது. வரி உயர்வு மூலம் அரசுக்கு ஆண்டிற்கு ரூ.185 கோடி கூடுதலாக வருவாய் கிடைக்கும்.

குடிமகன்கள் 'ஷாக்'


தமிழகத்தை காட்டிலும் புதுச்சேரியில் மது விலை மிகவும் குறைவு. மேலும், பலவகை மதுபானங்கள் பல்வேறு பிளேவர்களில் கிடைக்கும். இதனால் தமிழக உள்ளிட்ட பிற மாநில குடிமகன்கள் தாகம் தீர்க்கவே புதுச்சேரிக்கு குவிந்து வந்தனர். இந்நிலையில் புதுச்சேரி அரசு மதுபானங்களின் விலையில் அதிரடியாக உயர்த்தியுள்ளதால், குடிமகன்கள் 'ஷாக்' ஆகி உள்ளனர்.

அரசு கஜானாவுக்கு செல்லும்


மதுபான கடை உரிமையாளர்கள் கலால் வரி, கூடுதல் கலால் வரி உள்ளிட்ட வரிகளை கட்டியே சரக்குகளை கொள்முதல் செய்கின்றனர். எனவே மதுபானங்களில் குறிப்பிடப்பட்டுள்ள எம்.ஆர்.பி.,விலை மதுபான உரிமையாளர்களுக்கும், புதிதாக விதிக்கப்பட்டுள்ள கலால் வரி மற்றும் கூடுதல் கலால் வரி கலால் துறை வாயிலாக அரசு கஜானாவுக்கு சென்று விடும்.

எச்சரிக்கை

மதுபானங்களின் விலை உயர்வு நேற்று (28ம் தேதி) அமலுக்கு வந்ததால், நேற்று முதல் கொள்முதல் செய்யப்படும் மாதுபானங்களுக்கு மட்டுமே இந்த விலை உயர்வு பொருந்தும். 28 ம் தேதிக்கு முன்பு கொள்முதல் செய்த மதுபானங்களை பழைய விலைக்கே விற்க வேண்டும். மாறாக, பழைய மதுபானங்களை புதிய விலைக்கு விற்றால், சம்மந்தப்பட்ட மதுக்கடைகள் மீது சட்டமுறை எடையளவு விதிகளின் கீழ் அதிகப்பட்ச அபராதம் விதிக்கப்படும் என சட்டமுறை எடையளவு கட்டுப்பாட்டு அதிகாரி எச்சரித்துள்ளார்.








      Dinamalar
      Follow us