/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
'ஏக்தா மால்' அமைக்கும் அரசின் முடிவுக்கு சி.ஐ.டி.யு. கண்டனம்
/
'ஏக்தா மால்' அமைக்கும் அரசின் முடிவுக்கு சி.ஐ.டி.யு. கண்டனம்
'ஏக்தா மால்' அமைக்கும் அரசின் முடிவுக்கு சி.ஐ.டி.யு. கண்டனம்
'ஏக்தா மால்' அமைக்கும் அரசின் முடிவுக்கு சி.ஐ.டி.யு. கண்டனம்
ADDED : மார் 05, 2026 04:56 AM
புதுச்சேரி: புதுச்சேரி ஏ.எப்.டி., நிலத்தில், 'ஏக்தா மால்' அமைக்கும் அரசின் முடிவுக்கு, சி.ஐ.டி.யு. கண்டனம் தெரிவித்துள்ளது.
சி.ஐ.டி.யு., பொதுச் செயலாளர் சீனுவாசன் அறிக்கை;
கடந்த சட்டசபை தேர்தலின் போது, என்.ஆர்.காங்., - பா.ஜ., கூட்டணி, புதுச்சேரியில் மூடப்பட்ட பஞ்சாலைகளை ஒன்றிணைத்து, 'ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா' அமைக்கப்படும் என்று வாக்குறுதி அளித்தது.
ஆனால், ஏ.எப்.டி., பஞ்சாலைக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலத்தில், மத்திய அரசின் நிதி உதவியுடன் 'ஏக்தா மால்' என்ற வணிக வளாகம் அமைக்க அரசு முடிவு செய்திருப்பது, பா.ஜ., - என்.ஆர்.காங்., கூட்டணி அரசின் உறுதிமொழிக்கு மாறாக உள்ளது.
'மால்' அமைப்பது தொழிலாளர் வர்க்கத்திற்கு இழைக்கப்படும் துரோகமாகும். மால் ஒரு சுற்றுலா சார்ந்த விற்பனை மையம் மட்டுமே. இங்கு வெளிமாநிலப் பொருட்களே அதிகம் விற்கப்படும். இதன் மூலம் சில பேருக்கு மட்டுமே தற்காலிக வேலை கிடைக்கும்.
ஆனால், ஜவுளி பூங்கா அமைத்தால் பருத்தி கொள்முதல் முதல் ஆடை தயாரிப்பு வரை பல்வேறு நிலைகளில் 10,000 தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
'மித்ரா' திட்டத்தின் கீழ் ஜவுளிப் பூங்காவைக் கொண்டு வர வேண்டும். 'ஏக்தா மால்' போன்ற வணிகத் திட்டங்களை வேறு இடங்களுக்கு மாற்றியமைக்க அரசு தனது முடிவை மறுபரிசீலனை செய்திட வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

