sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மார்ச் 04, 2026 ,மாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 குடிமை பாதுகாப்பு :தன்னார்வலர்கள் 9ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

/

 குடிமை பாதுகாப்பு :தன்னார்வலர்கள் 9ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

 குடிமை பாதுகாப்பு :தன்னார்வலர்கள் 9ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

 குடிமை பாதுகாப்பு :தன்னார்வலர்கள் 9ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்


ADDED : ஜன 02, 2026 04:47 AM

Google News

ADDED : ஜன 02, 2026 04:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: பேரிடர் காலங்களில் 'குடிமை பாதுகாப்பு தன்னார்வலர்களாக செயல்பட விருப்பம் உள்ளவர்கள் வரும் 9ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

கலெக்டர் குலோத்துங்கன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

மத்திய உள்துறை அமைச்சகம், நாடு முழுதும் 244 மாவட்டங்களை குடிமை பாதுகாப்பு மாவட்டங்களாக வகைப்படுத்தி உள்ளது. அந்த மாவட்டங்களில் பேரிடர் மேலாண்மை திறன்களை வலுப்படுத்துவதற்காக 'குடிமை பாதுகாப்பு பயிற்சி மற்றும் திறன் மேம்பாடு' திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் 2 தலைமை பயிற்சியாளர்களை தேர்வு செய்து அவர்கள் மூலம் 360 குடிமை பாதுகாப்பு தன்னார்வலர்களை தயார் செய்ய அறிவுறுத்தியுள்ளது.

அதில் புதுச்சேரி தீயணைப்பு துறை முன்னணி தீயணைப்பாளர் செல்வக்குமார், ஊர்க்காவல் படை எழிலரசி இருவரும், கர்நாடாகாவில் உள்ள குடிமை பாதுகாப்பு பயிற்சி நிறுவனத்தில் 21 நாட்கள் பயிற்சி முடித்து புதுச்சேரி திரும்பியுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து 360 குடிமை பாதுகாப்பு தன்னார்வாலர்களை தேர்வு செய்திட புதுச்சேரி அரசு, கலெக்டர் மற்றும் குடிமை பாதுகாப்பு தன்னார்வலர் கட்டுப்பாட்டாளர் அலுவலகம் உரிய நடவடிக்கை எடுத்துள்ளது.

பேரிடர் காலங்களில் தன்னார்வலர்களாக பணியாற்ற விருப்பம் உள்ள, புதுச்சேரியை சேர்ந்த 18 முதல் 50 வயதிற்கு உட்பட்ட, 10ம் வகுப்பிற்கு மேல் படித்த, உடல் மற்றும் மன ஆரோக்கியத்துடன் உள்ள குற்றப் பின்னணி இல்லாதவர்கள் மாநில பேரிடர் மேலாண்மை ஆணைய இணையதளமான hrrps://psdma.py.gov.in/ விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படுபவர்கள் போலீஸ் மற்றும் மருத்துவத்துறை சோதனைக்கு பின் 7 நாட்கள் பயிற்சி பெற வேண்டும்.

தகுதியுள்ளவர்கள் (கல்லுாரி பயிலும் மாணவர் எனில் கல்லுாரியில் பெறப்பட்ட நன்னடத்தை சான்றிதழ் அவசியம்). விண்ணப்பங்களை வரும் 9ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us