/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
'ஆன்லைன்' டிரேடிங்கில் அதிக லாபம் என கூறி காரைக்கால் நபரிடம் ரூ. 1.26 கோடி 'அபேஸ்'
/
'ஆன்லைன்' டிரேடிங்கில் அதிக லாபம் என கூறி காரைக்கால் நபரிடம் ரூ. 1.26 கோடி 'அபேஸ்'
'ஆன்லைன்' டிரேடிங்கில் அதிக லாபம் என கூறி காரைக்கால் நபரிடம் ரூ. 1.26 கோடி 'அபேஸ்'
'ஆன்லைன்' டிரேடிங்கில் அதிக லாபம் என கூறி காரைக்கால் நபரிடம் ரூ. 1.26 கோடி 'அபேஸ்'
ADDED : ஜன 22, 2024 12:58 AM
புதுச்சேரி : ஆன்லைன் டிரேடிங் செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என, ஆசைவார்த்தை கூறி, காரைக்காலைச் சேர்ந்த நபரிடம்1.26 கோடி ரூபாயை சைபர் கிரைம் கும்பல் மோசடி செய்துள்ளது.
புதுச்சேரி தேசிய அளவில் கல்வி அறிவு அதிகம் உள்ள மாநிலமாக திகழ்கிறது. ஆனால், படித்து பட்டம் பெற்ற பலரும் மொபைல் சமூக வலைத்தளங்களில் வர கூடிய பல பொய் தகவல்களை உண்மை என நம்புகின்றனர்.
இதனால் இரட்டிப்பு லாபம், 20 சதவீத லாபம், பகுதி நேர வேலை, யூடியூப் பார்த்தால் பணம், ஓட்டல்களை ரிவியூவ் செய்து ஸ்டார் குறிப்பிட்டால் பணம் என, சமூக வலைத்தளத்தில் சைபர் கிரைம் மோசடி கும்பல் வெளியிடும் போலியான விளம்பரங்களை நம்பி, அதிக பணத்தை முதலீடு செய்து இழப்பது தொடர்கதையாக உள்ளது.
அந்த வரிசையில் காரைக்காலைச் சேர்ந்தவர் சோழன், 65. இவரை கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு 'வாட்ஸ்ஆப்' மூலம் தொடர்பு கொண்ட மர்ம நபர், ஆன்லைன் மூலம் டிரேடிங் எப்படி செய்வது என கற்று கொடுக்கிறோம் என, தெரிவித்தார். அதன்படி அவரது பயிற்சி கொடுத்தனர்.
மேலும் யூடியூப் லிங்க் அனுப்பி அதில் உள்ள வீடியோக்களை அனுப்பி வைத்தனர். அந்த வீடியோக்களில் பணம் முதலீடு செய்தால் 15 நாட்களில் பணம் இரட்டிப்பு ஆவது போல் காட்சிகள் இருந்தது.
இதை நம்பிய சோழன், போலியாக உருவாக்கி அனுப்பியடிரேடிங் வெப்சைட்டில் ரூ. 1.26 கோடி பணத்தை முதலீடு செய்தார். இதில் கடந்த 2 மாதங்களாக எந்த லாபமும் வரவில்லை. ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சோழன் புதுச்சேரி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.
இது தொடர்பாக இன்ஸ்பெக்டர் கீர்த்தி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி, அவர், பணம் செலுத்திய 10க்கும் மேற்பட்ட வங்கி கணக்குகளை முடக்கி வைத்துள்ளனர்.
எதையும் நம்ப வேண்டாம்
சைபர் கிரைம் எஸ்.பி., பாஸ்கரன் கூறுகையில், 'சமூக வலைத்தளத்தில் வரும் முதலீடு, வேலை வாய்ப்பு, வரன் தேடல், ஒரே நாளில் 10 சதவீத வருமானம், குறைந்த விலையில் பொருட்கள், வெளிநாட்டு வேலை, பழைய பொருட்களை குறைந்த விலைக்கு தருகிறோம். கிரடிட் கார்டில் கடன் வாங்கும் தொகை அதிகரித்து தருகிறோம்.மொபைல்போன் டவர் அமைக்க இடம் வேண்டும். இலவச ஆன்லைன் டிரேடிங் செய்ய கற்று தருகிறோம் போன்ற இணைய வழியில் வரும் தகவல் எதையும் நம்ப வேண்டாம்' என்றார்.